trincomalee hospital issue | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பொறுப்பற்ற நிர்வாகம்..!

  • May 25, 2026 - 10:14 AM
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையானது பல்வேறு பௌதீக, ஆளனி வளப் பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்றது. இதனால் நோயாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது. அதைவிட மருத்துவ அலட்சியப்போக்கு காரணமாக அநியாயமான முறையில் பல உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் திருகோணமலை வைத்தியசாலை இன்னும் உயிரோடு இருக்கிறதென்றால் அதற்கு அங்கு பணி புரியும் ஒரு சில வைத்தியர்களின் சேவையே காரணமாகும். திருகோணமலை வைத்தியசாலையின் குறைபாடுகளை சுட்டிக்காட்ட முற்பட்டால் அவற்றை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். வைத்தியசாலைக்கு செல்கின்ற […]

rain increase sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு..!

  • May 25, 2026 - 09:50 AM
  • 0 Comments

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நாடளாவிய ரீதியில் படிப்படியாக நிலைபெற்று வருவதன் காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில […]

missing fisherman | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கடலில் மீன்பிடிக்க சென்றவர் மாயம்..!

  • May 25, 2026 - 09:47 AM
  • 0 Comments

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்றவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் காணாமல் போனவரின் உறவினர்களால் நேற்று (24.05.2026) களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்றுமுன்தினம் கடலுக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என குறிப்பிடப்படுகின்றது. இதனையடுத்து குறித்த கடற்பகுதியில் தேடுதல் இடம்பெற்ற நிலையில், அவர் சென்ற படகு கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அந்த […]

vithiya case prison suicide | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி சிறைச்சாலையில் தற்கொலை..!

  • May 25, 2026 - 09:42 AM
  • 0 Comments

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 46 வயதுடைய அவர் நேற்று (24.05.2026) இரவு சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் திகதி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் […]

traditional games festival | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிவதொண்டர் திருக்கூட்டத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு விழா..!

  • May 25, 2026 - 09:33 AM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட சிவதொண்டர் திருக்கூட்டத்தின் அனுசரணையுடன் கரடியனாறு சித்திவிநாயகர் ஆலயம் மற்றும் கரடியனாறு பிரதேசத்திலுள்ள ஆலயங்களின் ஏற்பாட்டில் அறநெறிப் பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்களின் வருகையினை அதிகரிக்கும் நோக்கிலும் பாரம்பரிய கலாசாரப் போட்டிகளை ஊக்குவிக்கும் முகமாகவும் கரடியனாறு பிரதேசத்திலுள்ள அறநெறிப் பாடசாலைகளை ஒன்றிணைத்து நடாத்திய பாரம்பரிய கலாசார விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (24.05.2026) கரடியனாறு சித்திவிநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. கரடியனாறு சித்திவிநாயகர் ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக கரடியனாறு சித்திவிநாயகர் ஆலயப் […]

ampilanthurai road development | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொக்கடிச்சோலை அம்பிளாந்துறை வீதி அபிவிருத்தித் திட்டப் பணிகள் ஆரம்பம்..!

  • May 22, 2026 - 11:40 AM
  • 0 Comments

மட்டக்களப்பு – கொக்கடிச்சோலை – அம்பிளாந்துறை வீதி அபிவிருத்திப் பணிகள், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (21.05.2026) உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்துவைக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண நிதியத்தின் (EPC) கீழ் மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கொக்கட்டிச்சோலை – அம்பிளாந்துறை வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது, மேலும் இந்த வீதியின் நீளம் 1500 மீட்டர் ஆகும். 15 மில்லியன் […]

mullaitivu disability sports | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது..!

  • May 22, 2026 - 11:31 AM
  • 0 Comments

சமூக சேவைகள் திணைக்களமும் (மத்திய) முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி நேற்றைய தினம்(21) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேசசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து சமூக சேவை உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் முன்நூற்றி ஐம்பது பேர் கலந்துகொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் உடல் உள ஆரோக்கியத்தைப் பேணிடவும் திறமையானவர்களை இனங்கண்டு மாகாண மற்றும் […]

kelani river warning | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

களனி கங்கையை அருகில் வாழ்வோருக்கு எச்சரிக்கை..!

  • May 22, 2026 - 11:20 AM
  • 0 Comments

களனி கங்கையை சூழவுள்ள பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்காலப்பகுதிக்குள் ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, தெஹிஓவிட்ட, எஹலியகொட, எட்டியாந்தோட்டை மற்றும் புலத்கொஹுபிட்டிய ஆகிய பகுதிகளைச் சூழவுள்ள இடங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. களனி கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் தற்போது 300 மில்லிமீட்டரை நெருங்கிய கணிசமான […]

imf review next week | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

IMF இன் மீளாய்வுகள் அடுத்த வாரத்தில்..!

  • May 22, 2026 - 11:16 AM
  • 0 Comments

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு, அதன் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை எதிர்வரும் புதன்கிழமை (27.05.2026) பரிசீலிக்கவுள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜியோர்ஜியோ (Evan Papageorgiou) தெரிவிக்கையில், கடந்த ஆண்டுகளில் இலங்கை ஸ்திரமான பொருளாதார நிலையை மீட்டெடுப்பதிலும், கையிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் கூறினார். இந்த […]

elderly couple killed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வயோதிப தம்பதியினர் படுகொலை..!

  • May 22, 2026 - 11:11 AM
  • 0 Comments

ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த வயோதிப தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் அதேபகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. குறித்த தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பில் வசித்து வருவதுடன், இந்த தம்பதியினர் நீண்டகாலமாக இந்த வர்த்தக நிலையத்தில் வியாபாரம் செய்து வந்த நிலையில், தற்போது கடையை […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp