kottaikallar road development | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஓந்தாச்சிமடம் கோட்டைக்கல்லாறு வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்..!

  • May 22, 2026 - 10:46 AM
  • 0 Comments

கிழக்கு மாகாண மக்களின் அன்றாடப் போக்குவரத்தை எளிதாக்குவதையும், அப்பகுதியின் அபிவிருத்தியை மேலும் விரைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ஓந்தாச்சிமடம் – கோட்டைக்கல்லாறு வீதி அபிவிருத்தித் திட்டப் பணிகள், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் நேற்று (21.05.2026) ஆரம்பித்துவைக்கப்பட்டது. மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக ரூ. 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஓந்தாச்சிமடம் – கோட்டைக்கல்லாறு வீதியின் சீரமைப்பு மற்றும் Asphalt அடுக்குப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அபிவிருத்தி […]

sl weather today 19 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 22, 2026 - 10:27 AM
  • 0 Comments

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது. நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழைக்காலநிலை, அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22) அதிகாலை 5.30 மணிக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ […]

kokkilai pulmoddai bridge | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பது தொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கை தயார்..!

  • May 22, 2026 - 10:24 AM
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகிய பகுதிகளை இணைக்கும் இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுசெய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்திற்குள் குறித்த கொக்கிளய் – புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பது தொடர்பான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க இதன்போது பதிலளித்துள்ளார். பாராளுமன்ற […]

university student aid | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கு நிதியுதவி…!

  • May 21, 2026 - 01:00 PM
  • 0 Comments

​சுவிஸ்சர்லாந்து வாழ் வர்த்தகரின் நிதிப் பங்களிப்பில், பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. ​யாழ். ஊர்காவற்றுறை புனித அந்தோணியார் கல்லூரியிலிருந்து 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை மூலம் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கான பாராட்டு விழா, கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. ​இந்நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான 13 மாணவர்களுக்கான நிதி அன்பளிப்பை வழங்கினார். ​இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற […]

national gallery art theft | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

42 பழங்கால ஓவியங்கள் தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயம்..!

  • May 21, 2026 - 11:34 AM
  • 0 Comments

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். இன்று (21.05.2026) பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பதிலளித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். பண்டங்கள் கணக்கெடுப்புச் சபை ஒன்றின் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டில் தேசிய கலைக்கூடத்தின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பின்னரே இந்த காணாமல் போனமை தொடர்பான தகவல்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, இருப்புப் புத்தகத்தில் […]

roadside tree cutting rules | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வீதியோர மரங்களின் கிளைகளை வெட்டும் போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்க அறிவுறுத்தல்..!

  • May 21, 2026 - 11:28 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படும் மரங்களின் கிளைகளை மின்சார சபையினர் வெட்டும் போது, உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்குமாறு மின்சார சபையினருக்கு மாவட்ட செயலர் அறிவுறுத்தியுள்ளார். யாழ். மாவட்ட சுற்றாடல் குழு கூட்டத்தில் , மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படுவதாக , மரக்கிளைகளை மின்சார சபையினர் கண்மூடி தனமாக வெட்டி வீதிகளில் விட்டு செல்வதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. அதனை அடுத்து, இனிவரும் காலங்களில் இலங்கை மின்சார சபையினர் மரக்கிளைகளை வெட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது குறித்த […]

worship place noise control | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வழிபாட்டுத்தலங்களில் ஒலிபெருக்கி பாவனை , வானவேடிக்கை போன்றவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை..!

  • May 21, 2026 - 11:22 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டம் யாழ்.மாவட்ட செயலர் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர், மாவட்ட மட்டத்தில் இருக்கும் உள்ளூர் அதிகார சபைகள் கழிவு முகாமைத்துவம் மட்டுமின்றி சுற்றாடல் சார்ந்த, சூழல் சார்ந்த பாதுகாப்பு […]

kilinochchi ngo meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவன ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

  • May 21, 2026 - 10:33 AM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களினால் 2026 ஆம் ஆண்டு முதலாம் காலாண்டில் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மதிப்பீடும் 2026 ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டு (Q2) செயல்திட்டங்கள் புதிய திட்டங்கள், இலக்குகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் குறித்தான மாவட்ட அரச சார்பற்ற நிறுவன ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட மேலதிகஅரசாங்க அதிபர் திருமதி நளாயினி இன்பராஜ் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (20.05.2026) காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் […]

former policeman drug arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் விசாரணை முன்னெடுப்பு..!

  • May 21, 2026 - 10:22 AM
  • 0 Comments

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெலிகொம் அருகில் புதன்கிழமை(20) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார். 50 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து 10 கிராம் 130 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.அத்துடன் பணப்பை ,ஒரு தொகை பணம் […]

rda union action | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கிய RDA பொறியியலாளர் சங்கம்..!

  • May 21, 2026 - 10:11 AM
  • 0 Comments

சம்பள முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று (21.05.2026) முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகள் தொடர்பாக இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், அங்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமை காரணமாகவே இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.   இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp