nindavur event | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நிந்தவூரில் சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தல் குறித்து விரிவான கலந்துரையாடல்..!

  • Apr 21, 2026 - 09:50 AM
  • 0 Comments

நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சீர்கேடுகளை கட்டுப்படுத்தி, சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தி சமூக பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை (19.04.2026) நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது, நிந்தவூர் பிரதேசத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை, இளவயது மரணங்கள், வீதி விபத்துக்கள், ஒழுக்கச் சீர்கேடுகள் போன்ற சமூகத்தைப் பாதிக்கும் முக்கிய […]

bus incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தனியார் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்..!

  • Apr 20, 2026 - 11:42 AM
  • 0 Comments

வெள்ளவாய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றிலிருந்து 100 லீற்றர் மண்ணெண்ணெய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேருந்தின் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் வெள்ளவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வெள்ளவாய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

chunnakam police | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சுண்ணாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் மூவர் கைது..!

  • Apr 17, 2026 - 04:17 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனி நபர் ஒருவரை இலக்காகக் கொண்டு நடத்தப்படவிருந்த கொடூர வாள்வெட்டுத் தாக்குதல் முயற்சியைப் பொலிஸார் சாமர்த்தியமாக முறியடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசியத் தகவலும் பொலிஸ் முற்றுகையும் நேற்று (16/04/2026) புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதலுக்குத் தயாராக இருப்பதாகச் சுன்னாகம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்து அதிரடிச் சோதனையை முன்னெடுத்தனர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் […]

iran war end | Pathivu News உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈரானுடனான போர் முடியும் நிலையில் உள்ளது..!

  • Apr 15, 2026 - 09:35 AM
  • 0 Comments

ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பொக்ஸ் நியூஸிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன், என்று அவர் அந்த அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனத்திடம் கூறினார். அவர் மேலும் கூறுகையில், அமெரிக்கா இப்போது பின்வாங்கினால், ஈரான் தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆகும் என்று டிரம்ப் குறிப்பிட்டார். நாங்கள் இன்னும் வேலையை முடிக்கவில்லை. என்ன […]

family incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி மாயம்..!

  • Apr 15, 2026 - 09:31 AM
  • 0 Comments

சேருநுவர, சோமாவதி வனத்தின் ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். நேற்று (14.04.2026) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ்வாறு நீரில் மூழ்கியவர்கள் மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களாவர். காணாமல் போன இந்த மூன்று சகோதரர்களும், அவர்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் நீராடிக் கொண்டிருந்த போதே இவ்வாறு நீரில் […]

sl weather 18 5 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை..!

  • Apr 15, 2026 - 09:27 AM
  • 0 Comments

15.04.2026 மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் […]

fuel price rise | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மீண்டும் உயரும் மசகு எண்ணெய் விலை..!

  • Apr 13, 2026 - 09:57 AM
  • 0 Comments

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைத் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் துறைமுகங்களை முடக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதை அடுத்து, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ப்ரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 7% அதிகரித்து, அதன் புதிய விலை 102 டொலர்களாகக் காணப்படுகிறது. டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் விலை 8% […]

uyilankulam | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மன்னார் உயிலங்குளத்தில் இடம் பெற்ற ‘சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல் விழா..!

  • Apr 10, 2026 - 03:35 PM
  • 0 Comments

மன்னார் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், ‘சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல் விழா” இன்று வெள்ளிக்கிழமை (10.04.2026) காலை 10 மணியளவில் மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1718369565950292

kachchai electricity | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கச்சாய் பகுதியில் மின்கம்பங்களை மோதி தள்ளிய மணல் கொள்ளையர்கள்..!

  • Apr 10, 2026 - 03:14 PM
  • 0 Comments

கொடிகாமம் கச்சாய் பகுதியில் இன்று அதிகாலை(10.04.2026) 2 மணியளவில் சட்ட விரோத மணல் கொள்ளையர்களின் மணல் ஏற்றி சென்ற உழவுயந்திரம் மின்கம்பத்தி் மோதியதில் இரு பகுதிகளில் காணப்பட்ட மின் கம்பங்கள் பலத்த சேதம் அடைந்ததுடன் குறித்த பகுதியில் மின்சாரம் தடைபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1478059260428313  

vadamarachchi east | Pathivu News செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்..!

  • Apr 10, 2026 - 02:55 PM
  • 0 Comments

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம்(10.04.2026) காலை 9 மணியளவில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கம் உறுப்பினர்களால் ஒர் கவணயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 2024 ம் ஆண்டு கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவின் போது சந்தாப்பணம் கட்டுதல் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 2026 ம் ஆண்டு நிர்வாக தெரிவு மிகவும் சிறப்பாக இடம் பெற வேண்டும் என்பதற்காக 2026/1/15 […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp