first school term | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாடசாலைைளுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவு..!

  • Apr 10, 2026 - 09:49 AM
  • 0 Comments

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10.04.2026) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அவ்வாறு ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் 2026.07.24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

sl weather 18 4 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 10, 2026 - 09:46 AM
  • 0 Comments

10.04.2026 மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய […]

kumara jayakody case | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை..!

  • Apr 10, 2026 - 09:40 AM
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (10.04.2026) பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க்கட்சிகளால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

health minister appointment | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கல்முனை ஆதாரவைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர் பதவியேற்பு..!

  • Apr 10, 2026 - 09:33 AM
  • 0 Comments

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் நியமிக்கப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர், நேற்று முன்தினம் (08.04.2026) புதன்கிழமை, வைத்தியசாலையின் பணிப்பாளர் பணிமனையில் பதவியேற்றனர். சுகாதாரம் மற்றும் வெகுஜனஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் நியமிக்கப்பட்ட 16 உறுப்பினர்கள், கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் முன்னிலையில் பதவியேற்றனர். புதிய வைத்தியசாலை குழுவின் தவிசாளராக, கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரன் ராஜன் […]

missing | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

காணவில்லை..!

  • Apr 9, 2026 - 12:04 PM
  • 0 Comments

மன்னார் வங்காலை ஆனாள் நகரை சேர்ந்த செல்வி . ஆன் நிருசிக்கா பீரீஸ் என்ற தர்சா வயது 22 , நேற்று மாலை 5:30 மணி முதல் மன்னார் நகருக்கு வருகை தந்தவரை காணவில்லை. குடும்பத்தினர் காவல் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர். எனவே உறவுகளே குறித்த நபர் தொடர்பான தகவல் அறிந்தால் அருகிலுள்ள காவல் துறைக்கோ அல்லது குடும்பத்தினருக்கு அறிய தரவும் . 0763796686 ,

narthanalayam event | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பூர்ணா நர்த்தனாலயம் நடத்தும் நிருத்திய நாட்டிய சங்கமம் நிகழ்வு..!

  • Apr 9, 2026 - 11:27 AM
  • 0 Comments

பூர்ணா நர்த்தனாலயம் நடத்தும் நிருத்திய நாட்டிய சங்கமம் நிகழ்வு எதிர்வரும் 11.04.2026 சனிக்கிழமை பிற்பகல் 4மணிக்கு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தென்மராட்சிக் கல்வி வலய அழகியல் பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி விஜித்தா சுனில் ஆரியரத்னவின் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி கலந்து சிறப்பிக்கவுள்ளார். மேலும் இனிய விருந்தினராக கலைக்குரிசில் நடனக்கலைஞர் திருமதி நாட்டியக்கலாமணி நல்லினி சிவராமும், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் […]

59th buddha rice festival | Pathivu News உள்ளூர் செய்திகள் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

59 ஆவது தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ளது..!

  • Apr 9, 2026 - 11:04 AM
  • 0 Comments

09.04.2026 மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்த மாபெரும் கலாசார விழாவின் போது, விவசாயிகள் மிகுந்த பக்தியுடன் தயாரித்த தமது முதற்போக அறுவடையை புத்தபெருமானுக்கு அர்ப்பணித்தனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எமது கலாசாரத்தின் பெரும் பகுதியாக விவசாயம் பின்னிப்பிணைந்துள்ளதாகத் தெரிவித்தார். புத்தரிசி விழா அதன் உச்சகட்ட பலனாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் அடையாளமும் கலாசாரமும் இதன் மூலம் பிரதிபலிக்கின்றது என்றும் கூறினார். கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதே தமது நோக்கம் […]

backhoe bus incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பெக்கோ இயந்திரம் அரச பேருந்துடன் மோதியதில் 10 பயணிகள் காயம்..!

  • Apr 9, 2026 - 10:58 AM
  • 0 Comments

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, பெக்கோ இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (09.04.2026) அதிகாலை 1:30 மணியளவில் ஹம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, துறைமுகத்தை நோக்கி வீதியின் குறுக்கே சென்ற பெக்கோ இயந்திரத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் போது பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

ice drugs teddy | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்- முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கைது..!

  • Apr 9, 2026 - 09:44 AM
  • 0 Comments

விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் புதன்கிழமை(08.04.2026) மாலை இடம்பெற்றதுடன் குறித்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் பயன்படுத்திய பல வீடுகள் மணிக்கணக்கில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தன. அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு […]

three wheeler bus | Pathivu News செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முச்சக்கரவண்டி பேருந்துடன்மோதியதில் 6 வயது சிறுமி பலி..!

  • Apr 8, 2026 - 03:05 PM
  • 0 Comments

காலி – கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவை, நாரிகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டியும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இவ்விபத்தில் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹிக்கடுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் வெவ்ருகன்னல, சவ்ரித் மாவத்தையைச் சேர்ந்த பாத்திமா அலீதா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனமான செலுத்துகையே இந்த விபத்துக்குக் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp