காங்கேசன்துறையில் 187.56 ஏக்கர் காணியில் சிமெந்து பொதியிடல், உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுமதி கொடுங்கள்..!
காங்கேசன்துறை பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள 187.56 ஏக்கர் காணியில் சிமெந்து பொதியிடல், உற்பத்தி மற்றும் விநியோகக் கைத்தொழிலை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் […]









