new chinese ambassador meets former president | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியை சந்தித்த புதிய சீனத் தூதுவர்..!

  • Sep 25, 2026 - 11:15 AM
  • 0 Comments

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுவாக முன்னெடுத்துச் செல்வது குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் உலகளாவிய சூழ்நிலைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. தாம் ஜனாதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் பேணப்பட்ட இராஜதந்திர உறவுகள் மற்றும் சீனாவுடனான […]

semmanni mass grave genocide intent | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஒரு சமூகத்தின் எதிர்கால சந்ததியை உருவாக்காமல் தடுக்கும் நோக்குடன் அரங்கேற்றப்பட்டதா செம்மணி புதைகுழி..???

  • Aug 17, 2026 - 09:48 AM
  • 0 Comments

ஒரு சமூகத்தின் எதிர்காலச் சந்ததியை உருவாக்காமல் தடுக்கும் நோக்குடன் அரங்கேற்றப்பட்ட குற்றங்களா செம்மணி புதைகுழி? என இயற்கையின் நண்பர்கள் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.இது தொடர்பாக இயற்கையின் நண்பர்கள் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்; அரியாலை செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பேரதிர்ச்சி தரும் உண்மைகள் தற்போது சர்வதேச சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. இப்பகுதியில் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மற்றும் […]

vavuniya well body | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியா தோணிக்கல் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு..!

  • Apr 29, 2026 - 01:29 PM
  • 0 Comments

வவுனியா தோணிக்கள் சேக்கிளார் வீதியை சேர்ந்த 64 வயதுடைய கணபதிப்பிள்ளை தவக்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது   காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/980316844562655

ilmenite mining | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இல்மனைட் அகழ்தல் வேலைத்திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்த திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர்..!

  • Apr 28, 2026 - 05:13 PM
  • 0 Comments

இன்றைய தினம் திருக்கோவில் பிரதேச சபைக்கு வருகை தந்த capital Metals நிறுவனத்தின் அவுஸ்திரேலியா பிராந்திய முகாமையாளர் அவர்களினாலும் நிறுவனத்தின் ஏனைய அதிகாரிகளினாலும் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்தல் வேலைத்திட்டத்தின் அனுமதிக்கான கோரிக்கையினை திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளரிடம் முன்வைத்திருந்தார்கள் . இதற்கு அமைவாக பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் அவர்கள் குறித்த நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளரிடம் எங்களுடைய பிரதேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு செயற்பாட்டிற்கும் பிரதேச சபையினால் ஆதரவு தெரிவிக்கப்பட மாட்டாது எனவும் […]

export revenue rise sl | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் கடந்த பங்குனி மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு..!

  • Apr 24, 2026 - 10:46 AM
  • 0 Comments

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவிய போதிலும், கடந்த பங்குனி மாதத்தில் 1,467 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடிந்ததாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க நேற்று (23.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தத் விடயத்தைக் குறிப்பிட்டார். அதன்படி, பொருட்களின் ஏற்றுமதி மூலம் 1,180 மில்லியன் அமெரிக்க டொலர்களும், சேவை ஏற்றுமதி மூலம் 286 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளன. இதன் […]

thambalagamuwa new year festival | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தம்பலகாமத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு விழா..!

  • Apr 23, 2026 - 02:21 PM
  • 0 Comments

தம்பலகாமத்தில் மூவின மக்களும் கலந்து கொண்ட தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழா பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் தலைமையில் நேற்று (22.04.2026) புதன்கிழமை இடம்பெற்றது. இதில் செயலக உத்தியோகத்தர்களுக்கிடையில் பல பாரம்பரிய முறையிலான போட்டிகளும் இடம்பெற்றதுடன் கலை கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. குறித்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. நிருபர் வி.ரி.சகாதேவராஜா

salindu associates arrested | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

குடு சலிந்துவின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது..!

  • Apr 21, 2026 - 04:24 PM
  • 0 Comments

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான பாணதுறை குடு சலிந்து என்ற மல்ஷித சலிந்துவின் நெருங்கிய உதவியாளர்கள் இருவர் பாயாகல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் பாயாகல பகுதியில் இரகசியமாகத் தங்கியிருந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வலானை மத்திய ஊழல் ஒழிப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (21.04.2026) அதிகாலை பாயாகல நிர்மலவத்த மற்றும் கும்புகொட ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே […]

eravur pattu water tanker | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு 16000 லீட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் பவுசர் வழங்கி வைப்பு..!

  • Apr 21, 2026 - 01:14 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு குடிநீர் வழங்குவதற்கான பவுசர் ஒன்றினை புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (21.04.2026) வழங்கி வைத்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியினால் அதிகளவு பாதிக்கும் பிரதேச செயலாளர் பிரில் உள்ள ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு குடி நீர் விரியோகத்திற்கான 16000 லீட்டர் கொள்ளவு கொண்ட பவுசர் அனர்த்த நிவாரண சேவை நிலையத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந் […]

colombo airport incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்பு விமான நிலையத்தில் இந்தியரின் மோசமான செயல்..!

  • Apr 21, 2026 - 01:08 PM
  • 0 Comments

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய ‘குஷ்’ (Kush) போதைப்பொருளுடன் வெளிநாட்டு நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய இந்தியப் பிரஜை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

saiva scholar | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் சிவதீட்சை வழங்கும் நிகழ்வு..!

  • Apr 21, 2026 - 12:11 PM
  • 0 Comments

அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் சிவதீட்சை வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு செட்டிபாளையம் சோமநாத லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 22.04.2026 புதன்கிழமை காலை 8:00 மணி முதல் இடம்பெறவுள்ளது. அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் உப தலைவர் ​சைவப் புலவர் சிவானந்தஜோதி ஞானசூரியம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், தீட்சா குருவாக சிவஸ்ரீ மு. கு. சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வானது சைவ சமயப் பிரசாரச் செயலாளர் சைவப் புலவர் வே. மகேஸ்வரரத்தினம் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊