மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு குடிநீர் வழங்குவதற்கான பவுசர் ஒன்றினை புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (21.04.2026) வழங்கி வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியினால் அதிகளவு பாதிக்கும் பிரதேச செயலாளர் பிரில் உள்ள ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு குடி நீர் விரியோகத்திற்கான 16000 லீட்டர் கொள்ளவு கொண்ட பவுசர் அனர்த்த நிவாரண சேவை நிலையத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் , மாவட்ட நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.சுரேஸ்குமார், அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள், ஏறாவூர் பற்று பிரதேச சபை உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
