உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அஸ்வசும உதவிகள் சரியான நபர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்..!

aswasuma benefits issue | Pathivu News
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வசும முன்னேற்ற கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அஸ்வசும இணைப்பாளர் கே.விமலநாதன் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (21.04.2026) இடம் பெற்றது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலக வாரியான முன்னேற்றம் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றம் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டன.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அரச செயற்திட்டங்களை வினைத்திறனாக செயற்படுத்த வேண்டும் என்பதுடன் அஸ்வசும உதவிகள் சரியான நபர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதுடன் பிழையான நபர்களுக்கு வழங்காதிருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதன் போது மக்களின் நலன்புரி வேலைத்திட்டமான அஸ்வசும வேலைத்திட்டத்தை வினைத்திறனாக முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது எதிர் நோக்கும் பிரச்சினைகள் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும் அஸ்வசும பயனாளிகளுக்கு தேவையான விடயங்களை உரிய முறையில் கவனம் செலுத்தி அவர்களின் தரவுகளை துரித கதியில் இற்றைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி.கே.லக்சிகா நலன்புரி நன்மைகள் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp