gregory lake nuwara eliya | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நுவரெலியா கிரகரி வாவி சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்த திட்டம்..!

  • Apr 20, 2026 - 01:24 PM
  • 0 Comments

நுவரெலியா கிரகரி வாவியின் சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்துள்ளார். நேற்று (19.04.2026) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நுவரெலியா கிரகரி வாவியில் சுமார் 120 சுற்றுலா படகுகள் உள்ளன. நேற்று இடம்பெற்ற விபத்தையடுத்து, படகு உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை அழைத்து இது குறித்து […]

land encroachment protest vadamarachchi | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அரச காணி அபகரிப்பு -வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக அமைதிப் போராட்டம்.

  • Apr 20, 2026 - 01:15 PM
  • 0 Comments

அரச காணி அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டித்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக அமைதிப் போராட்டம் ஜே/420 கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த பொது மக்கள் ஒன்றிணைந்து, அரச காணி அபகரிப்புக்கு எதிராகவும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகளைக் கண்டித்தும் அமைதி வழிப் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன் முன்னெடுத்தனர். குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குடத்தனை வடக்கு மக்கள் காணி அபகரிப்பு மற்றும் துனை போகும் அரச […]

nuwara eliya visit | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நுவரெலியாவுக்கு விஜயம் செய்த இந்திய துணை ஜனாதிபதி..!

  • Apr 20, 2026 - 12:13 PM
  • 0 Comments

இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20.04.2026) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை நேரில் பார்வையிடுவதற்காக அவர் இந்த விஜயத்தை முன்னெடுத்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி நேற்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய அவர், […]

gold silver | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தங்கம் மற்றும் வெள்ளி பிரியர்களுக்கு தங்கமான செய்தி..!

  • Apr 20, 2026 - 11:29 AM
  • 0 Comments

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,796 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் 80.21 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றங்களால் தங்கம் விலை பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

sl weather 18 8 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 20, 2026 - 11:23 AM
  • 0 Comments

20.04.2026 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். அதேநேரம் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் […]

india meets sajith | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சஜித்தை சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி..!

  • Apr 20, 2026 - 11:18 AM
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று (19.04.2026) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல், பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய நடைமுறை ரீதியான வாய்ப்புகளை திறப்பது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையும் இந்தியாவும் வெறும் அண்டை நாடுகள் மட்டுமல்ல, பொதுவான வரலாறு, பொதுவான சவால்கள் மற்றும் பொதுவான எதிர்காலம் கொண்ட உண்மையான கூட்டாளர்களுமாவர். அனைத்து குடிமக்களுக்கும் இந்த கூட்டுறவின் பலன்களை […]

annai bhoopathy 38 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவேந்தல்..!

  • Apr 20, 2026 - 11:12 AM
  • 0 Comments

தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்றைய தினம்(19.04.2026) தமிழ் மக்கள் கூட்டணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அன்னை பூபதி அம்மாவின் பேத்தி கலந்து கொண்டு ஈகைச்சுடரை ஏற்றி மலர் மாலை அணிவித்து வணக்கத்தை செலுத்தினார். தொடர்ந்து , நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

foreigners tamil area | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் வெளிநாட்டவர்களுடன் சுற்றுலா சென்றவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு..!

  • Apr 20, 2026 - 11:05 AM
  • 0 Comments

வெளிநாட்டில் இருந்து வந்த உறவினர்களுடன் கடலில் நீந்தியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கட்டுவான் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள உறவினர்களுடன்,யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர்களும் நேற்றைய தினம்(19.04.2026) ஞாயிற்றுக்கிழமை கீரிமலை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கடலில் நீராடிய வேளை குறித்த நபர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து , அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,சில மணி நேரத்தில் காணாமல் […]

foreigners drugs | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இரு வெளிநாட்டவர் ‘குஷ்’ போதைப்பொருளுடன் கைது..!

  • Apr 20, 2026 - 10:32 AM
  • 0 Comments

பெருந்தொகையான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20.04.2026) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரும் 30 வயதுடைய யுவதி ஒருவரும் என தெரியவந்துள்ளது. இவர்கள் இந்த போதைப்பொருளை தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து கொள்வனவு செய்து, இந்தியாவின் பெங்களூரு நகருக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 6 கோடியே 40 […]

ampara incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் காணிச் சமபங்கு அவசியம்..!

  • Apr 20, 2026 - 10:19 AM
  • 0 Comments

சாய்ந்தமருதில் நடைபெற்ற கருத்தாடலில் வலியுறுத்தல் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் 2026 ஏப்ரல் 19 ஆம் திகதி, “அம்பாறை மாவட்டம்: காணிச் சமபங்கு வேண்டும்” என்ற தலைப்பில் சட்டத்தரணிகளான ஆஷிக் அலியார் மற்றும் சர்ஜுன் ஜமால்தீன் ஆகியோர் எழுதிய நூலை மையமாகக் கொண்டு விரிவான கருத்தாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றதுடன், ஒன்றியத்தின் முகாமைத்துவ செயலாளர் பிர் முகம்மது தலைமை தாங்கினார். ஒன்றியத்தின் நிர்வாக செயலாளர் எம்.எம். உதுமாலெப்பையின் நெறிப்படுத்தலில் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp