இன்றைய தினம் திருக்கோவில் பிரதேச சபைக்கு வருகை தந்த capital Metals நிறுவனத்தின் அவுஸ்திரேலியா பிராந்திய முகாமையாளர் அவர்களினாலும் நிறுவனத்தின் ஏனைய அதிகாரிகளினாலும் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்தல் வேலைத்திட்டத்தின் அனுமதிக்கான கோரிக்கையினை திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளரிடம் முன்வைத்திருந்தார்கள் .
இதற்கு அமைவாக பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் அவர்கள் குறித்த நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளரிடம் எங்களுடைய பிரதேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு செயற்பாட்டிற்கும் பிரதேச சபையினால் ஆதரவு தெரிவிக்கப்பட மாட்டாது எனவும் ,
பிரதேச மக்களுடைய விருப்பங்களுக்கு எதிராக நான் ஒருபோதும் செயற்படமாட்டேன் எனவும் கூறினார். மேலும் எமது பிரதேசத்திற்கு பொறுப்புடைய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கட்சித் தலைவர்கள் அனைவரும் மக்களின் விருப்பம் சார்ந்து நிற்கின்றார்கள் . அதேபோன்றே தவிசாளர் ஆகிய என்னால் எமது மக்களின் நலனை கருத்தில் கொண்டும், எமது பிரதேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பிரதேச சபையினால் இல்மனைட் அகழ்வதற்கு எந்தவித அனுமதியும் வழங்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்
.


What’s your Reaction?
