உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பூர்ணா நர்த்தனாலயம் நடத்தும் நிருத்திய நாட்டிய சங்கமம் நிகழ்வு..!

பூர்ணா நர்த்தனாலயம் நடத்தும் நிருத்திய நாட்டிய சங்கமம் நிகழ்வு எதிர்வரும் 11.04.2026 சனிக்கிழமை பிற்பகல் 4மணிக்கு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தென்மராட்சிக் கல்வி வலய அழகியல் பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி விஜித்தா சுனில் ஆரியரத்னவின் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மேலும் இனிய விருந்தினராக கலைக்குரிசில் நடனக்கலைஞர் திருமதி நாட்டியக்கலாமணி நல்லினி சிவராமும்,
சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஷ் அவர்களும்,
கௌரவ விருந்தினர்களாக சட்டத்தரணியும்-வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான கே.சயந்தன் மற்றும் சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோணேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதன்போது புஷ்பாஞ்சலி, கண்ணன் நடனம்,முருகன் கௌத்துவம், பல்லியம்,பாரதி பாடல்,சிவன் கீர்த்தனை ,தில்லானா, தேவிஸ்துதி மற்றும் காளிங்க நர்த்தனம் ஆகிய நாட்டிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்