எ9 வீதி புளியங்குளம் புதூர் பகுதியில் இன்று காலை(09.10.2026) இடம்பெற்ற விபத்தில் தந்தையும் ஒருவயது நிரம்பாத குழந்தையும் பலியாகியுள்ளது. தாய் படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா ஆனந்தர் புளியங்குளம் பகுதிக்கு நெல்விதைப்பதற்காக அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணம்செய்த தந்தை, தாய், ஒரு வயதுடைய குழந்தை உள்ளிட்டவர்கள் வாகனம் ஒன்றை முந்த முயற்சித்த போது எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகினர்.
எ9 வீதி புதூர் சந்திக்கு அண்மையில் இவ்விபத்து இடம்பெற்றது.
விபத்தில் காயமுற்றவர்கள் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் தந்தையும் குழந்தையும் உயிரிழந்துள்ளார்கள்.அவர்களது உடல்கள் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்ம தாய் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


