கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சம்மாந்துறை பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் “முழுமதியின் கலை நிகழ்வு” நாளை (25.11.2026, புதன் கிழமை) மாலை 6.00 மணிக்கு சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் தேசகீர்த்தி ஏஎல்.தௌபீக் தலைமை தாங்குகிறார்.
பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்எல்.முஹம்மட் ஹனிபா கலந்து கொள்கிறார். கௌரவ அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐஎல்எம்.மாஹிர் கலந்து கொள்கிறார்.
விஷேட அதிதிகளாக சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் பி.வாசித் அஹமட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் வைபிஎம்.நபாஸ், அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் எம்ஐ.மாஹிர், காரைதீவு ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் தேசமான்ய விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இலக்கிய அதிதிகளாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், கலாபூஷணம் பாவேந்தல் பாலமுனை பாறுக் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
வரவேற்பு நடனம், இஸ்லாமிய கீதம், செம்பு நடனம், ரபான் பைத், கோலாட்டம், கஸ்தா, பாடலுக்கான அபிநயம், மிமிகிரி,
ஈழத்து சிறுவர் பாடல், நாட்டார் கவி ஆகிய கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
( வி.ரி.சகாதேவராஜா)


