hlc review meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

HLC ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் HLC- க்கான காலாண்டு ஆய்வுக் கூட்டம்!

  • May 26, 2026 - 12:34 PM
  • 0 Comments

HLC ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் HLC- க்கான காலாண்டு ஆய்வுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (26) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்புப் பிராந்திய தொற்றா நோய்க்கான வைத்திய அதிகாரி எம்.ருதேசன் வரவேற்புரையினை ஆற்றினார். இவ்ஆய்வுக் கூட்டத்தில் வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவிச்சிகள் மற்றும் பணிமனை ஊழியர்கள் எனப் பலர் […]

sembiyanpattru church festival | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பக்திப் பரவசமாக இடம்பெற்ற செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழா..!

  • May 26, 2026 - 11:28 AM
  • 0 Comments

யாழ் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, மக்கள் வெள்ளத்தில் மிகச் சிறப்பாகவும் பக்திப் பரவசத்துடனும் நடைபெற்றது. மாலை அணிவித்து வரவேற்பு மற்றும் கூட்டுத்திருப்பலி இன்று (26.05.2026) அதிகாலை 6:00 மணியளவில் திருச்செபமாலையுடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, மாலை 6:30 மணியளவில் செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய அருட்பணி சபையினரின் சிறப்பில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆரம்பமானது. திருப்பலியின் துவக்கத்தில், வருகை […]

gunawardena court appearance | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நீதிமன்றுக்கு வருகை தந்த சரண குணவர்தன..!

  • May 26, 2026 - 11:17 AM
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளின் தீர்ப்பு இன்று (26.05.2026) வௌியாகவுள்ளது. அதற்காக அவர் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

kalmunai remand case | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு 14 நாட்கள் கம்பி..! -கல்முனையில் சம்பவம்

  • May 26, 2026 - 11:08 AM
  • 0 Comments

ரூபா பத்தாயிரம் தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் (தன்னினச்சேர்க்கை) ஈடுபட்ட வர்த்தகருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் நீண்ட காலமாக குறித்த ஓரினச்சேர்க்கை (தன்னினச்சேர்க்கை)செயற்பாடு இடம்பெற்று வந்துள்ளது. இதனை அறிந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளனர்.இதன்போது அங்கு சென்ற இரு சிறுவர்களையும் வரவேற்ற குறித்த வர்த்தகர் ஓரினச்சேர்க்கை (தன்னினச்சேர்க்கை) செயற்பாட்டிற்காக ரூபா பத்தாயிரம் […]

balali police allegation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பலாலி பொலிஸார் பொய் வழக்கு தாக்கல் செய்ததாக செ.கஜேந்திரன் குற்றச்சாட்டு..!

  • May 26, 2026 - 10:44 AM
  • 0 Comments

பலாலி பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்காக  தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான வாக்குமூலம் பலாலி பொலிசாரால் பெறப்பட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த 2025 டிசம்பர் 4ஆம் திகதி தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் குறித்து பலாலி பொலிஸார் என்னிடம் வாக்குமூலம் பதிவு செய்தார்கள். அன்றையதினம் […]

illegal goods seized | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சட்டவிரோத பொருட்கள் பறிமுதல்..!

  • May 26, 2026 - 10:07 AM
  • 0 Comments

மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்குப் படகில் கடத்துவதற்காக, வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய நபர்களை அவர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால், சமீபகாலமாக தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, சீனியப்பா தர்கா, களிமண்குண்டு, திருப்புல்லாணி மற்றும் பாம்பன் […]

sl weather today 20 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 26, 2026 - 09:59 AM
  • 0 Comments

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், இப்பகுதிகளின் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

north land release | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடக்கில் காணிகளில் சிலவற்றை விடுவிக்க நடவடிக்கை..!

  • May 25, 2026 - 11:01 AM
  • 0 Comments

வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் சிலவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் போதிய புரிதல் இன்றி போராட்டங்களை முன்னெடுக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியின்படி, மக்களின் நிலங்களை மக்களுக்கே திரும்ப ஒப்படைப்பதற்கான செயல்பாடுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. கடந்த […]

foreign cigarette arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று அதிகாலை வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் மூவர் கைது..!

  • May 25, 2026 - 10:24 AM
  • 0 Comments

60 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வர முற்பட்ட மூன்று வெளிநாட்டு விமானப் பயணிகள் இன்று (25.05.2026) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 31, 36 மற்றும் 40 வயதுடைய சீனப் பிரஜைகள் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இந்த சிகரெட்டுக்களை விமான நிலைய பசுமை வழி ஊடாக கடத்திச் செல்ல முயன்றபோதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க அதிகாரிகளின் அவதானத்தைத் […]

judge rizwan suspension | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.சி றிஸ்வான் இடை நிறுத்தம்..!

  • May 25, 2026 - 10:20 AM
  • 0 Comments

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வான் நீதிச்சேவை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (22.05.2026) முதல் இடை நிறுத்தி உள்ளது. இது தொடர்பான தொலை நகல் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிரான விசாரணைகள் நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிருபர் பாறுக் ஷிஹான்

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp