யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடப் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர் யாழ் போதனா வைத்தியசாலையில் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று நிபுணராகப் பணிபுரிகின்றார்.
நெதர்லாந்து நாட்டின் நிதியுதவியில் கிளிநொச்ச்சிப் பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மகப்பேற்று பிரிவில் இயங்கும் செயற்கைக் கருத்தரிப்பு நிலையத்தினை இவரது தலைமையில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட துறைசார் குழுவினரும் கிளிநொச்சி வைத்தியசாலை மருத்துவக்குழுவும் கடந்த ஜூன் மாதம் முதல் செயற்படுத்தி வருகின்றனர். இலங்கையில் அரச நிதியில் இயங்கும் முதலாவது இலவச செயற்கைக் கருத்தரிப்பு நிலையம் கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையில் இயங்குகின்றது. இந்த பணியில் பங்கேற்கும் அனைத்து மருத்துவக்குழுவினருக்கும் கிளி மக்கள் அமைப்பினர் தமது நன்றிகளையும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துகொண்டனர்.
கிளி மக்கள் அமைப்பின் தலைவர் சிவலிங்கம் துறைவன் தலையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்திய நிபுணர் ரத்னம் சதானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஆழுகை சபை உறுப்பினர் கிருஸ்னபிள்ளை விஜயராஜா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

What’s your Reaction?

