HLC ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் HLC- க்கான காலாண்டு ஆய்வுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (26) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்புப் பிராந்திய தொற்றா நோய்க்கான வைத்திய அதிகாரி எம்.ருதேசன் வரவேற்புரையினை ஆற்றினார்.
இவ்ஆய்வுக் கூட்டத்தில் வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவிச்சிகள் மற்றும் பணிமனை ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஊட்டச்சத்து மருத்துவ ஆலோசகர் வைத்தியர் ரதி ஜெயரூபன் ஆரோக்கியமான உணவுமுறை தொடர்பாகக் கருத்துரை வழங்கினார்.
(மட்டக்களப்பு நிருபர்)


