உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிவதொண்டர் திருக்கூட்டத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு விழா..!

மட்டக்களப்பு மாவட்ட சிவதொண்டர் திருக்கூட்டத்தின் அனுசரணையுடன் கரடியனாறு சித்திவிநாயகர் ஆலயம் மற்றும் கரடியனாறு பிரதேசத்திலுள்ள ஆலயங்களின் ஏற்பாட்டில்
அறநெறிப் பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்களின் வருகையினை அதிகரிக்கும் நோக்கிலும் பாரம்பரிய கலாசாரப் போட்டிகளை ஊக்குவிக்கும் முகமாகவும் கரடியனாறு பிரதேசத்திலுள்ள அறநெறிப் பாடசாலைகளை ஒன்றிணைத்து நடாத்திய பாரம்பரிய கலாசார விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (24.05.2026) கரடியனாறு சித்திவிநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

கரடியனாறு சித்திவிநாயகர் ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக கரடியனாறு சித்திவிநாயகர் ஆலயப் பிரதம குரு ஈசான சிவாச்சாரியார் த.பாலச்சந்திரன் குருக்கள், சித்திவிநாயகர் ஆலய குரு சிவஸ்ரீ அரவிந்தன் ஐயா, சிவதொண்டர் திருக்கூட்டத்தின் ஆலோசகர் செந்தமிழ் அருஞ்சுனைஞர் பிரபா ஐயா மற்றும் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பிருந்தாபன், சிவதொண்டர் திருக்கூட்டத்தின் தலைவர் சிவதொண்டன் கே.கமல்ராஜ், அதிபர் எஸ்.செந்தில்நாதன், எஸ்.சங்கர் ஐயா மற்றும் கரடியனாறு பிரதேசத்திலுள்ள ஆலய நிர்வாகங்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது முட்டாய் ஓட்டம்,பலூன் ஊதி உடைத்தல்,தேசிக்காய் கரண்டி ஓட்டம்,பணிஸ் சாப்பிடுதல்,தண்ணீர் நிரப்புதல்,யானைக்கு கண்வைத்தல், பெரியவர்களுக்கான முட்டி உடைத்தல்,சங்கீதக் கதிரை மற்றும் ஆசிரியர்களுக்கான தொப்பி மாற்றுதல் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு நிருபர்

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை