motorcycle accident in jaffna police officer killed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் அறுகுவெளி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி..!

  • Sep 29, 2026 - 10:22 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – மன்னார் ஏ35 வீதி, அறுகுவெளிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(29.09.2026) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தோடு மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பூநகரி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் மன்னார் – வட்டக்கண்டல் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய எமிலியானுஸ் அன்ரனி என பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

jaffna teaching hospital velankanni church feast | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ். போதனா வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா..!

  • Sep 29, 2026 - 10:18 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் பேரருட்திரு கலாநிதி அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை திருவிழா திருப்பலியை நிறைவேற்றி ஆசீர்வாதம் வழங்கினார். தொடர்ந்து, நோயாளிகள் விரைவில் நலம் பெறவும், அவர்களைப் பராமரிக்கும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் தமது சேவையை சிறப்பாக முன்னெடுக்கவும் விசேட இறைவேண்டல்கள் மேற்கொள்ளப்பட்டன.  

if the government wasnt behind the statue removal restore it | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிலை அகற்றியதற்கு அரசாங்கம் காரணமில்லை என்றால் சிலையை மீள வையுங்கள்..!

  • Sep 29, 2026 - 10:08 AM
  • 0 Comments

நல்லூரில் தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்டமைக்கு அரசாங்கம் காரணமில்லை என்றால் , அவ்விடத்தில் சட்ட ரீதியாக சிலையை நிறுவ அனுமதிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நல்லூரில் தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்ட விடயத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். அது தொடர்பில் சி . வீ.கே சிவஞானத்திடம் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் பொலிஸார் சிலையை அகற்றிய விடயத்திலே […]

dont turn remembrance events into political party conflicts | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நினைவேந்தல்களை அரசியல் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றாதீர்கள்..!

  • Sep 29, 2026 - 10:04 AM
  • 0 Comments

நினைவு நாள்கள் அரசியல் மோதல்களுக்கான களமாக மாறக்கூடாது. அரசியல் வேறுபாடுகளைத் தாண்டிதியாகங்களை நினைவுகூருவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ்ப்பாண பொலிஸாரினால் , பெயர்த்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் , அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், பல சூழ்ச்சிகளுக்கு மத்தியில் அரசியல் செய்ய வேண்டிய […]

protest in thirukkovil against removal of thileepan statue | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தியாகி திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து திருக்கோவிலில் போராட்டம்..!

  • Sep 29, 2026 - 10:01 AM
  • 0 Comments

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக,நல்லூரில் தியாக தீபம் திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுமாறு கோரியும் நேற்று திங்கட்கிழமை (28.09.2026) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாட்டில், தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு இப்போராட்டம், முன்னெடுக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் ஆரம்ப நாளான கடந்த 15ஆம் […]

woman arrested with jewellery worth rs 30 million | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

3கோடி பெறுமதியான நகைகளுடன் பெண் கைது..!

  • Sep 29, 2026 - 09:53 AM
  • 0 Comments

நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நகைகள் அடங்கிய பொதியுடன் ஒரு பெண், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர், அங்கொட, ஹல்கஹதெனிய வீதியில் வசித்து வந்த 38 வயது பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-226 என்ற விமானத்தில் மூலம் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று (28) வந்தடைந்தார். கைது செய்யப்பட்ட பெண்ணின் சூட்கேஸில் இருந்து 916 கிராம் எடை கொண்ட […]

horrific accident in the early hours today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று அதிகாலை நேரத்தில் நடந்த கோர விபத்து..!

  • Sep 29, 2026 - 09:51 AM
  • 0 Comments

ஒருவர் பலி – மூவர் படுகாயம் திருகோணமலை ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் இன்று (29.09.2026) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த கார், சாரதிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் தூக்கக் கலக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் இறக்கக்கண்டி – நான்காம் வட்டாரம், வாளையூற்று பகுதியைச் சேர்ந்த 29 வயதான என். […]

fire breaks out at shop in vavuniya bazaar | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியா பஜார் பகுதியில் விற்பனை நிலையத்தில் தீவிபத்து..!

  • Sep 29, 2026 - 09:47 AM
  • 0 Comments

வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலையமொன்றில் நேற்று மாலை ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ வேகமாக பரவத் தொடங்கிய நிலையில், உடனடியாக செயற்பட்ட ஊழியர்கள் ஜெனரேட்டரை பாதுகாப்பாக வெளியேற்றி, அங்கு ஏற்பட்ட பாரிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். . இடம்: வவுனியா பஜார் வீதி நேரம்: நேற்று மாலை காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2326824238091005

removal of thiyaga deepam statue an attack on the right to remember | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தியாக தீபத்தின் சிலை அகற்றம் – நினைவுகூரும் உரிமையின் மீதான தாக்குதலா..?

  • Sep 29, 2026 - 09:41 AM
  • 0 Comments

மயூரப்பிரியன். “சிலைகள் உடைந்தாலும் தியாகங்கள் உடைவதில்லை” என்பதற்கேற்ப, தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஆழந்த வேதனையையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது. உணவின்றியும் நீரின்றியும் 12 நாட்கள் போராடி தன் உயிரை அர்ப்பணித்த ஒரு தியாகியின் நினைவிடத்தையும் சிலையையும் அகற்றுவது, வரலாற்று அடையாளங்களை அழிக்கும் முயற்சியாகவே கருதப்படுகிறது. தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளில் நீங்காத இடம் பிடித்த தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட நிகழ்வானது, வெறும் ஒரு கட்டமைப்பை தகர்த்தெறிந்த […]

jaffna district mega job fair | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மாவட்டத்தில் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வு..!

  • Sep 29, 2026 - 09:38 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வானது எதிர்வரும் சனிக்கிழமை அன்று (03.10.2026) காலை 8.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கருத்து தெரிவித்தார். காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2236962300415877

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊