உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று அதிகாலை நேரத்தில் நடந்த கோர விபத்து..!

horrific accident in the early hours today | Pathivu News
ஒருவர் பலி – மூவர் படுகாயம்
திருகோணமலை ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் இன்று (29.09.2026) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த கார், சாரதிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் தூக்கக் கலக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் இறக்கக்கண்டி – நான்காம் வட்டாரம், வாளையூற்று பகுதியைச் சேர்ந்த 29 வயதான என். நிஜாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி , ஐந்து வயது மகன் மற்றும் 19 வயது சகோதரர் ஆகியோர் காயமடைந்து முதலில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊