நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நகைகள் அடங்கிய பொதியுடன் ஒரு பெண், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், அங்கொட, ஹல்கஹதெனிய வீதியில் வசித்து வந்த 38 வயது பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-226 என்ற விமானத்தில் மூலம் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று (28) வந்தடைந்தார்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் சூட்கேஸில் இருந்து 916 கிராம் எடை கொண்ட காப்புகள் மற்றும் கழுத்து மாலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட நகைகளின் பெறுமதி சுமார் 3 கோடியே 66 இலட்சத்து 28 ஆயிரத்து 937 ரூபாய் எனக் மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணை மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?

