காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சைக் குழு ஆகிய 5 தரப்பும் தலா இரண்டு ஆசனங்களையும், தமிழ் அரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளனர்.
சுயேச்சை குழு , தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை தமக்கு இடையில் தவிசாளர் பதவியை 16 மாதங்கள் வீதமாக பகிர்ந்து கொண்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் முதலாவது 16 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் , முன்னதாக தவிசாளராக பதவி வகித்த சுயேச்சை குழுவை சேர்ந்த கிருஷ்ணன் கோவிந்தராசா இராஜினாமா செய்ததை அடுத்து , அடுத்த 16 மாதங்களுக்கான தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் கட்சியினால் நியமிக்கப்பட்ட நிலையில் , இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவின் போது , அதே கட்சியை சேர்ந்த மற்றுமொரு உறுப்பினரும் போட்டியிட்டு இருவருக்கும் சம வாக்குகள் கிடைக்கப்பெற்றமையால் , கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் திருவுள சீட்டு மூலம் தவிசாளராக தெரிவாகியுள்ளார்.
What’s your Reaction?

