12 ஆண்டுகளுக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்திற்கு பதக்கம்; திருக்கோவில் பொலிஸ் சார்ஜன்ட் விஜிதா சாதனை..!
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 85ஆவது வருடாந்த பொலிஸ் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் கிருஷ்ணமூர்த்தி விஜிதா 2 கிலோமீற்றர் வேக நடைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று அம்பாறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இப்போட்டியில் நாடளாவிய ரீதியில் 38 வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், பொலிஸ் சார்ஜன்ட் கிருஷ்ணமூர்த்தி விஜிதா சிறப்பாகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். இப்போட்டியில் முதலிடம் பெற்றயு.வி. கல்ஹாரி மதிரிக்கா வீராங்கனை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் […]









