அம்பாறை மாவட்டம் பாணம சாஸ்திரவெளி பீனட் ஃபார்ம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மீட்பு மற்றும் காப்பாற்றும் பயிற்சி நிகழ்ச்சி இலங்கை விமானப்படையினரால் நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி நிகழ்ச்சி, விமானப்படைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் (விமானப் பிரிவு) மற்றும் நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் (தரைப்படை பிரிவு) ஆகியோரின் மேற்பார்வையுடனும், இலங்கை விமானப்படை அம்பாறை முகாமின் கட்டளை அதிகாரியின் நேரடி கண்காணிப்பின்கீழும் நடைபெற்றது. இதில் இலங்கை விமானப்படை ரெஜிமென்ட் சிறப்புப் படை, எண் 7 ஹெலிகாப்டர் படைப்பிரிவு மற்றும் எண் 8 இலகுரக போக்குவரத்து விமானப் படைப்பிரிவு ஆகியவை பங்கேற்றன. இத்தகைய பயிற்சிகளின் நோக்கம், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் […]









