srilanka today weather | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Jun 23, 2026 - 09:29 AM
  • 0 Comments

23.06.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் […]

land issue court ruling | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காணி விவகாரத்தை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்; இன நல்லுறவை பாதிக்கக் கூடாது – கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்…

  • Jun 22, 2026 - 01:17 PM
  • 0 Comments

காரைதீவு பிரதேச சபையின் அபிவிருத்திக்காக பல்வேறு சமய மற்றும் சமூக அமைப்புகள் காணிகளை வழங்கியுள்ளன. கலாசார மண்டபம் அமைந்துள்ள காணி உள்ளிட்ட பல முக்கிய இடங்கள் நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தினால் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டது, பொது நூலகம், வாகன தரிப்பிடம் உள்ளிட்ட வசதிகளுக்கான காணிகளும் அதேபோன்று வழங்கப்பட்டது. மேலும், தனியார் நபர்களும் சமூக நலனைக் கருத்தில் கொண்டு தங்களது காணிகளை பிரதேச சபை பயன்பாட்டிற்காக வழங்கியுள்ளனர். இப்போது பேசுபொருளாக மாறியுள்ள குறித்த காணிப்பிரச்சினை நீதிமன்றத்தில் நிலுவையில் […]

batticaloa student success | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி – உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரிச் சாதனை மாணவிகள் பாராட்டிக் கௌரவிப்பு!

  • Jun 22, 2026 - 01:04 PM
  • 0 Comments

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2025 (2026) நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (22) கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் கல்லடி உப்போடை பிரதான வீதியிலுள்ள பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க அதிபர், பிரதி அதிபர், உபஅதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் அதிபரால் பாடசாலைக் கொடியேற்றப்பட்டு, பிரதான மண்டபத்தில் அதிபர் […]

muslim central college principal | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் நியமிக்க கோரிக்கை..!

  • Jun 22, 2026 - 12:01 PM
  • 0 Comments

கல்வி,உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் பிரதம மந்திரி திருமதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இவ் ஆலோசனைக்கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை ” சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நீண்ட காலமாக இலங்கை கல்வி நிர்வாக சேவை – 1ம் தர அதிபர் வெற்றிடம், பிரதி அதிபர்கள் வெற்றிடங்களும் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் […]

prevent dengue mosquitoes | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

நுளம்புகள் முட்டையிடக்கூடிய இடங்களை அழிப்பதன் மூலமே அதன் குடித்தொகையைக் கட்டுப்படுத்தி டெங்கு பரவலைத் தடுக்கலாம்..!

  • Jun 22, 2026 - 11:13 AM
  • 0 Comments

நுளம்புகள் முட்டையிடக்கூடிய இடங்களை அழிப்பதன் மூலமே அதன் குடித்தொகையைக் கட்டுப்படுத்தி டெங்கு பரவலைத் தடுக்கலாம் எனப் பூநகரிப் பிரதேச மேற்பார்வைப் பொதுச் சுகாகதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். பூநகரிப் பிரதேசசெயலகம்,பூநகரிப் பொலிஸ்நிலையம், சுகாதார திணைக்களம் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து மேற்கொண்ட டெங்குக் கட்டுப்பாட்டு சிரமதானப் பணியின் இறுதியில் உரையாற்றியபோதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; டெங்கு நுளம்புகள் பெரும்பாலும் வீட்டுக்கு வெளியே காலை, மாலை வேளைகளிலேயே கடிக்கக் கூடியன. […]

karadiyanaru spiritual event | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கரடியனாறு பிரதேசத்தில் நடைபெற்ற மாணிக்கவாசகர் குருபூசை தின நிகழ்வும், அறநெறிக்கல்வி விழிப்புணர்வு ஆன்மீக எழுச்சி ஊர்வலமும்..!

  • Jun 22, 2026 - 10:31 AM
  • 0 Comments

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசனை, வழிகாட்டலுக்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட சிவதொண்டர் திருக்கூட்டத்தின் ஏற்பாட்டில் கரடியனாறு சித்திவிநாயகர் ஆலயம், சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை ஆகியன இணைந்து நடாத்திய மாணிக்கவாசகர் குருபூசை தின நிகழ்வும், ஆன்மீக எழுச்சி ஊர்வலமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) கரடியனாறு சித்திவிநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மாணிக்கவாசகர் சுவாமிகள் திருவுருவப் படம் தாங்கிய ஆன்மீக எழுச்சி ஊர்வலம் கரடியனாறு நரசிங்கவைரவர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி, ஊரைச் சுற்றி சித்திவிநாயகர் ஆலயத்தை […]

international saiva conference | Pathivu News உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

சர்வதேச சைவ மாநாட்டிற்கு வருகைதரும் திருப்பேரூர் மற்றும் திருஞான சம்பந்த ஆதீன சுவாமிகள்..!

  • Jun 22, 2026 - 10:26 AM
  • 0 Comments

பிரணவம் அறக்கட்டளை நடாத்தும் முதலாவது சர்வதேச சைவ மாநாடு “வாழ்வியலில் திருமுறைகள் திருமுறைகளில் வாழ்வியல்” எனும் தொனிப்பொருளுக்கு அமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கோவை திருப்பேரூர் ஆதீனத்தைச் சேர்ந்த திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாரும், திருஞானசம்பந்தர் ஆதீனத்தைச் சேர்ந்த அருட்குருநாதர் ஸ்ரீமத் சிவாகர தேசிக […]

uruguay under pressure | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உருகுவே அணிக்கு சவாலாக விளங்கிய புதிய அணி..!

  • Jun 22, 2026 - 10:22 AM
  • 0 Comments

2026 பிஃபா உலகக் கிண்ணத் தொடரில் உருகுவே மற்றும் கபோ வெர்டே ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி, 2 – 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றுள்ளது. இருமுறை உலக சேம்பியனான உருகுவே அணியில் பல அனுபவமிக்க வீரர்கள் இருந்த போதிலும், முதன்முறையாக உலக கிண்ணத்திற்கு தகுதிப் பெற்றுள்ள கபோ வெர்டே அணியை வெற்றிக்கொள்ள முடியவில்லை. ​ முன்னதாக ஐரோப்பிய சேம்பியனான ஸ்பெயின் அணியை கோல் […]

nurse mental health | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் தாதியர்கள்..!

  • Jun 22, 2026 - 10:16 AM
  • 0 Comments

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால், தாதியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. தாதியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கமும் சாதகமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக அதன் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், […]

rain alert sri lanka | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

இன்று இலங்கையில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..!

  • Jun 22, 2026 - 10:13 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (22.06.2026) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊