kachchai temple festival | Pathivu News புதியவை உள்ளூர் பதிவு தரிசனம் முக்கிய செய்திகள்

கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய ஏழாம் நாள் விஷேட தவில் நாதஸ்வரக்கச்சேரி..!

  • Jun 19, 2026 - 10:14 AM
  • 0 Comments

காலம்:20.06.2026 சனிக்கிழமை நேரம் மாலை 06.30 மணிக்கு ஈழம் மற்றும் இந்திய தவில்,நாதஸ்வர வித்து வான்களின் சிறப்பு தவில் நாதஸ்வரக்கச்சேரி மற்றும் சிந்துபுரம் நாகப்பு ஆற்றுகை கலைஞர்களின் பொம்மலாட்டமும் இடம்பெறும். குறித்த நிகழ்வுகளை Pathivunews.com எனும் முகநூல் பக்கம் மற்றும் வலை ஒளி,மற்றும் இணையத்தளம் ஊடாகவும் நேரலையாக பார்வையிட முடியும். ஏழாம் நாள் உபயகாரர்கள் சிதம்பரப்பிள்ளை செல்வநாயகம் குடும்பம்,செல்வநாயகம் நிஜந்தன் குடும்பம் ஊடக அனுசரணை கச்சாய் கண்ணகை அம்மன் ஒலி ஒளி(KKA sound&Light)

eastern ayurveda cricket | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

மிகப் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண ஆயுர்வேத பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டி இம்முறை அம்பாறை மாவட்டத்தில்..!

  • Jun 19, 2026 - 10:08 AM
  • 0 Comments

எதிர்வரும் 2026.06.20,21 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் கிழக்கு மாகாண பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் கீழுள்ள திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாரை மற்றும் கல்முனை ஆகிய பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் பிரீமியர் லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளது. குறித்த பிரீமியர் லீக் போட்டிக்கு பிரதம அதிதியாக சுதேச மருத்துவத்துறை […]

food safety alert | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொருத்தமான உணவுப்பாதுகாப்பு முறைகளைப் பேணாமையினால் ஆபிரிக்க மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன..!

  • Jun 19, 2026 - 10:03 AM
  • 0 Comments

பொருத்தமான உணவுப்பாதுகாப்பு முறைகளைப் பேணாமையினால் ஆபிரிக்க மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன என பூநகரிப் பிரதேச மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். பூநகரி நான்காம் கட்டைப் பகுதியில் பொதுமக்களுக்கு உணவுப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்படி தெரிவித்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; பொருத்தமான உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளை வீடுகளிலும், உணவுகையாளும் நிறுவனங்களிலும் நாம் கடைப்பிடிக்காமையினால் நுண்ணங்கிகள் மற்றும் நச்சு இரசாயனங்கள் மூலம் நோய்த்தாக்கங்களும் […]

human remains investigation | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணியில் மீட்கப்படும் என்புகூடுகள் யாருடையவை என அடையாளம் காணும் பணிகள் முடக்கம்..!

  • Jun 18, 2026 - 10:29 AM
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து தொடர்ச்சியாக என்புகூடுகள் மீட்கப்படுகின்றனவே தவிர , அவை யாருடையவை என்பதை அடையாளம் காணும் பணிகள் ஓராண்டாகியும் இன்னும் முடக்கப்பட்டுள்ளன எனவே நாளைய தினம் வெள்ளிக்கிழமை செம்மணிக்கு வருகை தரும் நீதி அமைச்சர் , அகழ்ந்து எடுக்கப்பட்ட என்புத் தொகுதிகள் யாருடையவை என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், இந்த கொடூரக் குற்றங்களுக்குக் காரணமானவர்களுக்கு எதிராகத் தாமதமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திர தெரிவித்துள்ளார் செம்மணி […]

kilinochchi tragedy | Pathivu News முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை

வேலைக்கு சென்று திரும்பிய யாழ் இளைஞனுக்கு கிளிநொச்சியில் நடந்த துயரம்..!

  • Jun 18, 2026 - 10:03 AM
  • 0 Comments

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியானார். குறித்த இளைஞர் தொழிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, அவர் பயணித்த மோட்டார் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றின் மீது மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இளைஞரே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக […]

ronaldo setback | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

ரொனால்டோவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்..!

  • Jun 18, 2026 - 09:38 AM
  • 0 Comments

நடப்பு பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் கொங்கோ அணிக்கு எதிரான முதல் போட்டியில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் பதிவு செய்யவில்லை. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் 48 அணிகளும் அதன் முதல் ஆட்டத்தில் விளையாடி உள்ளன. பிரிவுக்கு 4 அணிகள் வீதம் மொத்தம் 12 பிரிவுகளாக சுற்றுகள் நடைபெறுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹியூஸ்டனில் ‘கே’ பிரிவில் உள்ள போர்ச்சுகல் […]

jaffna gold smuggling | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 8பேர் கைது 6 பேரின் வயிற்றுக்குள் தங்கக்கட்டிகள்..!

  • Jun 18, 2026 - 09:34 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இருந்து நாக பட்டினத்திற்கு தங்கத்தை விழுங்கி கடத்தி செல்ல முற்பட்ட 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை தங்க கட்டிகளை கடத்தி செல்லும் நோக்குடன் தமது உடைமையில் வைத்திருந்த இரண்டு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர்களிடம் இருந்து தலா 100 கிராம் தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது, காங்கேசன்துறையில் இருந்து சிவகங்கை கப்பல் மூலம் நாகப்பட்டணத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை செல்லவிருந்த கப்பலில் பயணிக்க தயாராக 146 […]

sl weather update 2 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Jun 18, 2026 - 09:21 AM
  • 0 Comments

18.06.2026 மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 2 மணிக்கு மேல் ஊவா மாகாணம் மற்றும் முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் […]

citizen mirror recognition | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

Citizen mirror இற்கான தரம் AAA அங்கீகார விருது!

  • Jun 17, 2026 - 12:31 PM
  • 0 Comments

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் Citizen mirror இற்கான தரம் AAA அங்கிகாரம் பெற்ற பிரதேச செயலகங்களில் ஒன்றாக போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மாவட்ட ரீதியில் 7 ஆம் இடத்தினையும் தேசிய ரீதியாக 48 வது இடத்தையும் பெற்று தெரிவு செய்யப்பட்டது குறித்த நிகழ்வானது 16.06.2026 அன்று காலி முகத்திடலில் இடம்பெற்றது கைத்தொழில் முயற்சியாண்மை அமைச்சில் செயலாளர் திருமதி திலகா ஜெயசுந்தர மற்றும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் அமைச்சின் செயலாளர் திரு ஆலோகபண்டார ஆகியோரிடமிருந்து AAA சான்றிதழை போரதீவுப்பற்று […]

jaffna student achievement | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றுள்ளார்..!

  • Jun 17, 2026 - 10:07 AM
  • 0 Comments

வருடாவருடம் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குனர்களையும் புத்தாக்க செயற்பாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா SLASSCOM நிறுவனத்தின் ஆதரவுடன் இடம்பெற்று வருகிறது. இவ் வருடத்திற்கான விழா காலி முகத்திடல் ITC ரத்னதீப (ITC Ratnadipa) விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் வட மாகாணத்திற்கான பாடசாலை ரீதியில் சிறந்த புத்தாக்கமாகவும் இவ்வருடத்திற்கான சிறந்த புத்தாக்குனராகவும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையை சேர்ந்த செல்வி ரூபிகா அருந்தவம் தெரிவுசெய்யப்பட்டு அவருக்கான விருதும் சான்றிதழும் குறித்த […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊