இந்த பயிற்சி நிகழ்ச்சி, விமானப்படைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் (விமானப் பிரிவு) மற்றும் நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் (தரைப்படை பிரிவு) ஆகியோரின் மேற்பார்வையுடனும், இலங்கை விமானப்படை அம்பாறை முகாமின் கட்டளை அதிகாரியின் நேரடி கண்காணிப்பின்கீழும் நடைபெற்றது. இதில் இலங்கை விமானப்படை ரெஜிமென்ட் சிறப்புப் படை, எண் 7 ஹெலிகாப்டர் படைப்பிரிவு மற்றும் எண் 8 இலகுரக போக்குவரத்து விமானப் படைப்பிரிவு ஆகியவை பங்கேற்றன.
இத்தகைய பயிற்சிகளின் நோக்கம், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை விபத்துகளிலிருந்து பாதுகாப்பதுடன், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக இலங்கை விமானப்படை வழங்கும் பங்களிப்பை சமூகத்திற்கு எடுத்துக்காட்டுவதாகும்.
இந்த பயிற்சியின் போது, எதிரிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகளை மீட்பது மற்றும் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை விமானம் மூலம் காப்பாற்றி, தேவையான மருத்துவ சிகிச்சைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விமானம் வழியாக அனுப்புவது போன்ற செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையில் இலங்கை விமானப்படை ரெஜிமென்ட் சிறப்புப் படையின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அணி மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு (Search and Rescue) அணி ஆகியவை தீவிரமாக பங்களிப்பு வழங்கின.
ஜே.கே.யதுர்ஷன்


