திராய்க்கேணிப் படுகொலை 36 ம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல்!
திராய்க்கேணிப் படுகொலையின் 36 ம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் நேற்று (6) மாலை அங்கு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள திராய்க்கேணி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் 1990.08.06 அன்று நடந்த மிலேச்சத்தனமான படுகொலைகளின் 36 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வே நடைபெற்றது. 1990 ம் ஆண்டு ஆவணி மாதம் 06 ம் திகதியன்று அந்தக் கிராமத்தையண்டி வாழ்ந்த சில முஸ்லீம் காடையர் குழுக்களால் அரச படைகளின் துணையுடன் நடந்தேறிய மிலேச்சத்தனமான படுகொலையில் […]









