1954ஆம் ஆண்டு அமரர் தர்மரட்ணம் என்பவரின் தென்னந்தோட்டத்தில் அமைக்கப்பட்ட குடியேற்றக் கிராமம் திராய்க்கேணியாகும். திராய்க்கேணிக்கு கிழக்குப் பக்கத்தில் ஒலுவில் கிராமமும் தெற்குப் பக்கத்தில் பாலமுனையும் அமைந்துள்ளது. இக்கிராமம் அட்டாளைச்சேனை உதவிஅரசாங்க அதிபர் பிரிவின் கீழும் அக்கரைப்பற்று நீதிமன்று நியாதிக்கத்தின் கீழும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் முன்நூற்றெழுபதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் முன்நூற்றைம்பது வீடுகளில் வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் பிரதான தொழில் விவசாயமாகும். 1990.08.05 இல் திராய்க்கேணியில் வசித்து வந்த இஸ்லாமியர்களில் ஒருவர் காட்டுக்குச் சென்றவேளை மர்மமான முறையில் உயிரிழந்த்தைத் தொடர்ந்து […]
குளவி கொட்டுக்கு இலக்காகி திருகோணமலை பாடசாலை ஒன்றின் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை திவுல்வெவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்தமையினால் மாணவர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் சிகிச்சைக்காக மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் மூன்று மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வடமாகாண ரீதியாகப் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை உறுதிப்படுத்த வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ‘தேசிய போசாக்கு மாதம்’ மற்றும் ‘ENOUGH’ பரப்புரைக்கு ஆதரவாக, சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனைச் சமூகம் மற்றும் வேள்ட் விசன் அமைப்பின் அனுசரணையுடன் தாய்மார்க் கழகங்கள் இணைந்து நடாத்திய போசாக்குக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் நேற்றைய தினம் புதன்கிழமை வட்டுக்கோட்டை பிரதேச […]
இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை மீட்கும் பணிகளை கடற்படை ஆரம்பித்துள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்றிரவு சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளானது. இந்தப் படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்த நிலையில் அவர்கள் அனர்த்தத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான பணிகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
வீடுகளில் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைவகைகளை விடுத்து விலை கொடுத்து விரைவு உணவுகளை வாங்கி நோய்களை வளர்க்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனை வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற போசாக்குக் கண்காட்சியில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், போர்க் கால இடம்பெயர்வுகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாகக் கடந்த காலத்தில் பலரும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர். போர் […]
தற்போது நிலவும் தீவிர தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலையில் இன்று (06.08.2026) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 […]
கிழக்கு மாகாணத்தின் கடற்பழங்குடியினர் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தையும் மரபுகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் கடற்பழங்குடியினரின் பாரம்பரிய விழா, நேற்று (05.08.2026) முத்தூர் நல்லூர் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, கடற்பழங்குடியினர் சமூகத்தின் கலாச்சார அடையாளம், பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் மூதாதையர் அறிவைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியின் போது, பாரம்பரிய மத சடங்குகள், கலாச்சார கூறுகள், சமூகத் தலைவர்களின் ஆசிகள் மற்றும் கடற்பழங்குடியினரின் […]
சாவு அறிவித்தல்..! மந்துவிலை பிறப்பிடமாகவும், தாவாளை இயற்றாலை கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா சின்னப்பிள்ளை அவர்கள் 03/08/2026 அன்று திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலம் சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வியும், காலம் சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும் நாகேஸ்வரி, மங்களேஸ்வரி, ஐங்கரப்பிள்ளை, உதயகுமார், , நடேசபிள்ளை, முருகதாஸ், நிமலதாஸ், ஆகியோரின் அன்பு தாயாரும் இராமசாமி, யோகேஸ்வரன், ஜெயலக்ஷ்மி, செல்வி, சாந்தனாயகி, யோகேஸ்வரி, ரோகினி, […]
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்காக செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு அழைக்கப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். இதன்பின்னரே, முன்வைக்கப்பட்ட கருத்தைக் கருத்தில் கொண்ட நீதிபதி, வழக்கை விசாரணைக்காக செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.