உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஓந்தாச்சிமடம் கோட்டைக்கல்லாறு வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்..!

கிழக்கு மாகாண மக்களின் அன்றாடப் போக்குவரத்தை எளிதாக்குவதையும், அப்பகுதியின் அபிவிருத்தியை மேலும் விரைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ஓந்தாச்சிமடம் – கோட்டைக்கல்லாறு வீதி அபிவிருத்தித் திட்டப் பணிகள், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் நேற்று (21.05.2026) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக ரூ. 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஓந்தாச்சிமடம் – கோட்டைக்கல்லாறு வீதியின் சீரமைப்பு மற்றும் Asphalt அடுக்குப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அபிவிருத்தி செய்யப்படும் இவ்வீதியின் மொத்த நீளம் 862 மீட்டர் ஆகும்.

இந்த அபிவிருத்திப் பணிகள் அப்பகுதியில் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கவும், வீதிப் பாதுகாப்பை உறுதி செய்யவும், பிராந்தியப் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், மக்களுக்குத் தரமான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமாகிய கந்தசாமி பிரபு அவர்களும் கலந்துகொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை