உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் தொடர்புண்டென உதய கம்மன்பில குற்றசாசாட்டு

  • Feb 24, 2025 - 09:57 PM
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் தொடர்பிருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே தகவல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி பதில் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரவி செனவிரத்ன நடவடிக்கை எடுப்பாரா என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார். பிவிதுரு ஹெல உருமய அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் மேலும் குறிப்பிடுகையில், கணேமுல்ல சஞ்சீவ மீது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

குற்றச் செயல்களுக்கு துப்பாக்கி தீர்வாகாதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு

  • Feb 24, 2025 - 12:29 PM
  • 0 Comments

சமூகத்தில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்திற்கு புறம்பான கொலைகள் ஒரு தீர்வாகாதுஎன தெரிவித்துள்ள ,லங்கை சட்டத்தரணிகள் சங்கம்,அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை பின்பற்றினாலே குற்றங்களைகட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது 2025பெப்ரவரி 19ம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குள் சந்தேக நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார், சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்தவேளை அவர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் 21ம் திகதி இரவு ,ரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரின் காவலில் இருந்தவேளை சுட்டுக்கொல்லப்பட்டனர், பொலிஸாருடனான மோதல் ஒன்றின் போதே […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மரணதண்டனை நிறைவேற்றம் குறித்து ஜனாதிபதி ஆராய மாட்டார் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்

  • Feb 24, 2025 - 11:54 AM
  • 0 Comments

மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் ஆராயவில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐலண்டிற்கு கருத்து தெரிவித்துள்ள நீதியமைச்சர் மரணதண்டனை நிறைவேற்றம் குறித்து எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் ஆராயவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சராகவும் உள்ள ஜனாதிபதி மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களிற்கு தண்டனையை நிறைவேற்றுவது ஒரு வழிமுறையில்லை என்பது குறித்து தெளிவாக உள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற கொலைகயின் பின்னர் இது குறித்து ஆராயவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போதைய பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு நாங்கள் […]

இந்தியா உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தலைமன்னார் கடலில் மீண்டும் 32 தமிழக மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்

  • Feb 24, 2025 - 11:50 AM
  • 0 Comments

தலைமன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதி நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியாவில் விபத்து காரும் மோட்டார் சைக்கிளும் தீயில் எரிந்து நாசம்

  • Feb 24, 2025 - 10:37 AM
  • 0 Comments

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரும் மோட்டார் சைக்கிளும் முற்றாக தீப்பற்றி எறிந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் திங்கட்கிழமை வவுனியா – பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும், பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய நிலையில் விபத்துக்குள்ளாகி இருக்கின்றது. இதனை அடுத்து இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தப்பியோடி தலைமறைவு வாழ்கையிலிருக்கும் படையினரை கைதுசெய்ய உத்தரவு – பாதுகாப்புச் செயலாளர்

  • Feb 24, 2025 - 10:30 AM
  • 0 Comments

பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் செயற்படும் பாதாள உலக கும்பல்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உத்திகளை மேற்கொள்வதே பாதுகாப்பு அமைச்சின் முக்கிய நோக்கம் ஆகும். மேலும், பாதுகாப்பு செயலாளர் கொழும்பிலுள்ள தகவல் ஊடக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் 350 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • Feb 24, 2025 - 10:24 AM
  • 0 Comments

வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுஃ இது தொடர்பில் கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒ கைது செய்யப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வாகனம் கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் பகுதியில் இடை மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது 150 […]

உலகம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையின் சிறுநீரக பாதிப்பால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

  • Feb 24, 2025 - 08:51 AM
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவர் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வாடிகன் தேவாலயத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போப் பிரான்சிஸ் […]

இந்தியா

இலங்கை கடற்படைக்கெதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம்

  • Feb 24, 2025 - 08:44 AM
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இரணிய தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தது. ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை ஏலத்தில் விடுவதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி தமிழக […]

இந்தியா செய்திகள் ஜோதிடம்

உயிரின் ஓசையே ஓம் என ஆன்மீகத்தின் மீது அதிக பற்றுள்ளவர்கள் நம்புகிறார்கள். நீங்கள் எப்படி?

  • Feb 24, 2025 - 02:44 AM
  • 0 Comments

கருப்பையில் இருக்கும் குழந்தை ‘ஓம்’ வடிவில்தான் உள்ளது என்பதே, ‘ஓம்’ என்ற மந்திர சொல்லுக்கும், மனித வாழ்விற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை உணர்த்தும்.. தொப்புளில் பிராணன் எனப்படும் மூச்சுக் காற்று உள்ளது. ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்வான் என்பதற்கு ஏற்ப, எவ்வளவு மூச்சுகள் இருக்க வேண்டுமோ அவ்வளவு மூச்சும் அநேக சுற்றுகளாய் அதில் இருக்கும். அதிலிருந்து இரவு பகலாய் மூச்சு செலவழிந்து கொண்டே இருக்கிறது. இறுதியில் தொப்புளில் மூச்சு எதுவுமில்லாமல் காலியாகிவிடும். மூச்சு தொப்புளில் காலியாகிவிட்டால் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp