உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மத்திய மாகாண ஆளுநருக்கும் சீனாவின் தேசிய இன விவகார அமைச்சருக்குமிடையில் கலந்துரையாடல்

  • Feb 25, 2025 - 11:00 AM
  • 0 Comments

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனுக்கும் சீன மக்கள் குடியரசின் தூதுக் குழுவினருக்கும் இடையே கண்டியில் உள்ள ஆளுநர் காரியாலயத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. சீனாவின் தேசிய இன விவகார அமைச்சர் (Minister of the National Ethnic Affairs) பென் யூ(Pan Yue) தலைமையிலான இக்குழுவினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சீனாவின் உதவியுடன் மத்திய மாகாணத்தில் மேற்கொள்ளக்கூடிய திட்டங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது. குறிப்பாக, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் அதிகளவு சுற்றுலாத்துறையினரை கண்டிக்கு அழைத்து வருவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியாவுக்கு வாருங்கோ நல்ல காற்றை சுவாசியுங்கோ

  • Feb 25, 2025 - 10:13 AM
  • 0 Comments

நாட்டில் வவுனியாவில் மட்டும் நல்ல நிலையில் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாட்டில் நேற்று (24-02-2025) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும், வவுனியாவில் மட்டும் நல்ல நிலையிலும் காணப்பட்டது. இன்று காற்றின் தரம் 40 தொடக்கம் 78க்கு இடையில் இருக்கும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பிஸ்ட்டல் கொடுத்துதவிய பெண் சந்தேகநபரின் தாயார், சகோதரன் கைது!

  • Feb 25, 2025 - 09:23 AM
  • 0 Comments

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19ஆம் திகதி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு கணேமுல்ல சஞ்சீவ என்பவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவினால் நேற்று திங்கட்கிழமை (24) கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த பிங்புர தேவகே சமிந்து திவங்க வீரசிங்க என்ற 23 வயதுடைய இளைஞனும், அதே பகுதியைச் சேர்ந்த சேசத்புர தேவகே சமந்தி என்ற 48 வயதுடைய பெண்ணும் கொலை தொடர்பான […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அண்மையில் உயிரிழந்த தமிழினியின் சண்முகராசா பொலிஸ் திணைக்களத்திற்கு எழுதியுள்ள கடிதம்.

  • Feb 25, 2025 - 09:11 AM
  • 0 Comments

வடக்கு மாகாண காவல்துறை துணைத் தலைவர் அலுவலக முகவரி காங்கேசன் துறை. பொருள்: எனது மகள் திருமதி தமிழினி சதீசனின் கொலை குறித்து விசாரணை நடத்த கோரிக்கை. அன்புள்ள ஐயா, எனது மகளின் அகாலமரணம் தொடர்பாகு உரிய விசாரணைகளுக்காகவும் யாழ்ப்பாண மக்கள் மற்றும் செட்டிக்குளம் மக்கள் சார்பாகவும் எனது மகளும் ஆறு மாத கர்ப்பிணியும், அரசு ஊழியருமான திருமதி தமிழினி சதீசன், தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் துயரமான மற்றும் அகால மரணம் குறித்து முறையாக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் உள்ளதாலேயே நாட்டில் பொருளாதார சிக்கல் – இராமநாதன் அச்சுனா

  • Feb 25, 2025 - 08:38 AM
  • 0 Comments

வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குக்கு நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் பிச்சையளிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பிச்சை எடுப்பதற்கு தயராக இல்லையென்பதனை உங்களுக்கு சொல்லுகின்றேன். எமது சகோதரர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள். நாங்கள் பில்லியன், ரில்லியன் கணக்கான நிதியை கொண்டு வருகின்றோம். பிச்சை போடுகின்றோம் .தலதா மாளிகைக்கு குண்டுவைத்த ரோஹன விஜேவீர பயங்கரவாதியல்ல, ஆனால் எமது பிரபாகரனை பயங்கரவாதி என்பீர்கள் ஏனெனில் நாங்கள் தமிழர்கள் என யாழ் மாவட்ட சுயேட்சை உறுப்பினர் இராமநாதன் […]

உலகம் உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னுரையில் இலங்கை தொடர்பில் நிஸப்தம்

  • Feb 25, 2025 - 08:29 AM
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (23-02-2025) ஆரம்பமான நிலையில், உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் ஆரம்ப உரையில் இலங்கை குறித்து விசேடமாக எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் நேற்று ) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், நேற்றைய தொடக்க அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் […]

விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின 6வது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து

  • Feb 25, 2025 - 12:45 AM
  • 0 Comments

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 6-வது போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது. இதில் வங்கதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதின. நூணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேசம் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தன்ஜித் ஹசன் நஜ்முல் ஹொசைன் ஸான்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 8.2 ஓவரில் 45 ஓட்டங்களாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. தன்ஜித் ஹசன் 24 பந்தில் […]

இந்தியா விளையாட்டு

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது

  • Feb 25, 2025 - 12:31 AM
  • 0 Comments

வங்கதேசம் இன்று நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்ததால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏ பிரிவில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெறும். முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வங்கதேசத்திற்கு எதிரான 2-வது போட்டியில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

13 ஆவது திருத்தம் மாற்றமில்லாமல் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்

  • Feb 25, 2025 - 12:13 AM
  • 0 Comments

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மாற்றமில்லாமல் அமுல்படுத்தப்படும்.வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பொதுஜன அபிப்ராயத்துக்கு போதுமான காலவகாசம் வழங்கப்பட்டு, பாராளுமன்றத்தில் விரிவான கலந்துரையாடலுடன் புதிய அரசியலமைப்பினை உருவாக்க தயாராகவே இருப்பிறோம். இதற்கு முன்னர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும், சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் […]

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 4 பிரதேசங்களுக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவராக சிறீபவானந்தராஜா நியமனம்

  • Feb 24, 2025 - 10:01 PM
  • 0 Comments

யாழ் மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிறீபவானந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவிக்கான நியமனத்தினை ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறீபவானந்தராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாசம் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வலி வடக்கு, சங்கானை, சண்டிலிப்பாய் , கரவெட்டி ஆகிய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.   […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp