விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின 6வது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து

e0ae90e0ae9ae0aebfe0ae9ae0aebf e0ae9ae0aebee0aeaee0af8de0aeaae0aebfe0aeafe0aea9e0af8de0aeb8e0af8d e0ae9fe0aebfe0aeb0e0aebee0aeaae0aebf | Pathivu News

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 6-வது போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது.

இதில் வங்கதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதின.

நூணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வங்கதேசம் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தன்ஜித் ஹசன் நஜ்முல் ஹொசைன் ஸான்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
அணியின் ஸ்கோர் 8.2 ஓவரில் 45 ஓட்டங்களாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது.

தன்ஜித் ஹசன் 24 பந்தில் 24 ஓட்டங்களாக எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ஸான்டோ உடன் மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்தார். மெஹிதி ஹசன் மிராஸ் 14 பந்தில் 13 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஸான்டோ சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
இதற்கிடையே தவ்ஹித் ஹிரிடோய் 7 ரன்னிலும், முஸபிகுர் ரஹிம் 2 ஓட்டங்களிலும், மெஹ்முதுல்லா 4 ஓட்டங்களில் வெளியேறினர்.

இதனால் 118 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்து திணறியது.
6-வது விக்கெட்டுக்கு ஸான்டோ உடன் ஜாகர் அலி ஜோடி சேர்ந்தார்.
இந்த சோடி தாக்குப்பிடித்து விளையாடியது. என்றாலும் ஸான்டோ 110 பந்தில் 9 பவுண்டரியுடன் 77 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது வங்கதேசம் 37.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அதன்பின் ஜாகர் அலியுடன் ஜோடி சேர்ந்த ரிஸாத் ஹொசைன் 25 பந்தில் 26 ஓட்டங்கள் அடித்தார்.

ஜாகர அலி இறுதி வரை போராடி 55 பந்தில் 45 ஓட்டங்கள் அடிக்க, வங்கதேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணி சார்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 10 ஓவர்கள் வீசி 26 ஓட்டங்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
ஓஸரூர்கே 10 ஓவரில் 48 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 237 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது.

வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய வில் யங் முதல் ஓவரின் கடைசி பந்தில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்

அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது

You may also like

e0aeaee0ae95e0aeb3e0aebfe0aeb0e0af8d e0ae9fe0aebf20 e0ae89e0aeb2e0ae95e0ae95e0af8d e0ae95e0aebfe0aea3e0af8de0aea3e0aeaee0af8d e0ae87 | Pathivu News
விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp