கடந்த ஜனவரி ஒன்றிலிருந்து 17 துப்பாக்கிச் சூடு 49 பேர் கைது!
அண்மைய காலங்களில் நாட்டில் இடம்பெற்ற அனைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புடைய பெரும்பாலானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். காவல்துறை ஊடக பிரிவில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையில் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 11 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடையவை எனவும், […]









