உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் தொடர் பேராட்டம் சர்வதேச அவதானம் பெற்றுள்ளது ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம்

  • Feb 25, 2025 - 06:37 PM
  • 0 Comments

இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் என்பவற்றின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட அவர்களது கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் நேற்று (24-02-2025) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ் சிறப்பு குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தின் பின்னணியில் சட்டத்தரணிகள்?

  • Feb 25, 2025 - 06:29 PM
  • 0 Comments

பல்வேறு மோசடி வழக்குகளை துரிதமாக விசாரணை செய்து, நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக நீதியைப் பெற்றுக்கொடுத்தார் என அறியப்பட்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணை பிரிவின் (SCIB) பொறுப்பதிகாரி, காவல்துறை பரிசோதகர் குணறோயனுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழான இணைப்பு பிரிவுக்கு பொறுப்பதிரியாக இடமாற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சிலரின் காவல்துறை மேலிடத்துக்கான மனுக்கள், காவல்துறையின் மாவட்ட நிலை நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாகவே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்புண்டு- அமைச்சரவை பேச்சாளர்

  • Feb 25, 2025 - 06:26 PM
  • 0 Comments

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதான பொறுப்பு உண்டு. எது எவ்வாறிருப்பினும் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த வழக்கு விசாரணைகள் எவ்வித தடையும் இன்றி முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அர்ஜூன […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

8 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கையில் பாலியாறு நீர் திட்டத்திற்கு நிதியொதுக்குமாறு சீ.வி.கே. சிவஞானம் கடிதம்

  • Feb 25, 2025 - 06:12 PM
  • 0 Comments

பாலியாறு நீர்வழங்கல் திட்டத்திற்கு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனினும் தற்போது பரீசினைக்குட்படுத்தி இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கிடு செய்யுமாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண மாவட்ட மக்கள் முகம்கொடுத்துவரும் நீர்விநியோகப் பிரச்சனை தொடர்பாக தாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறீர்கள் என நான் திடமாக நம்புகிறேன். கடந்த ஏழு தசாப்தங்களாக யாழ்ப்பாண மாநகர பிரதேச, தீவக மற்றும் தென்மராட்சி மக்கள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கும் படையினரின் உயர் மட்டத்தினருக்குமிடையில் அவசர சந்திப்பு

  • Feb 25, 2025 - 06:07 PM
  • 0 Comments

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் சிரேஷ்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

காலி துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்.

  • Feb 25, 2025 - 05:59 PM
  • 0 Comments

காலி, தடல்ல மயானத்திற்கு அருகில் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். காலி, தடல்ல மயானத்திற்கு அருகில் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மற்றும் மனைவி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கணவன் உயிரிழந்துள்ள […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் கெங்காதேவி இறங்குதறை கட்டுமானத்தில் பொறியியலாளரின் அசமந்தப் போக்கு இளைஞன் காயம்

  • Feb 25, 2025 - 05:45 PM
  • 0 Comments

மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் அந்த கடற்பகுதியில் மீனவரின் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியதில் நபரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடற்றொழில் அமைச்சின் மூலம் எமது கடற்றொழில் சங்கத்துக்கு 8 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. எட்டு இலட்சம் ரூபா வேலைத்திட்டத்திற்கான வரைபை நாங்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தோம். இருப்பினும் அவர்கள் எமது திட்டத்தை புறந்தள்ளிவிட்டு தமது எண்ணத்திற்கு ஏற்றாற்போல் அபிவிருத்தி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் இனி பயமின்றி சூதாடலாம்

  • Feb 25, 2025 - 05:33 PM
  • 0 Comments

சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தலுக்கு அதிகாரசபையை நிறுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் சீட்டாடுதல் மற்றும் விளையாட்டு நிறுவனங்களை தரநிர்ணயப்படுத்தல், சமூகப் பாதிப்புக்களைக் குறைத்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு விரிவானதும் முழுமையானதுமான விடயதானத்துடன் கூடிய சுயாதீன ஒழுங்குபடுத்தல் நிறுவனமாக, சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையை நிறுவுவதற்கும், அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் 2023.06.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி தண்டனையாளன் சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணத்திற்கு வீட்டார் அழைப்பு

  • Feb 25, 2025 - 05:17 PM
  • 0 Comments

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் எதிர்வரும் 28ம் திகதி எள்ளாங்குளம் துயிலும் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. 33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் விதைக்கப்பட்ட இடத்தில் அவர் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்டு தாயாரால் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள ஆலயத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டம் தொழில்பாட்டு காலத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

  • Feb 25, 2025 - 05:10 PM
  • 0 Comments

கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகின் கால வரையறையை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கருத்திட்டக் கண்காணிப்பு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல் மற்றும் பயன்பாட்டு சேவைகள் ஒருங்கிணைப்புக்காக இலங்கை அரசாங்கம் மற்றும் சீ.எச்.ஈ.சீ. துறைமுக நகர நிறுவனத்தை இணைப்புச் செய்வதற்கான பிரதான அலகாக, கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகு இயங்கி வருகின்றது. இக்கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள பணிகள் 2027 ஜூன் மாதமளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp