இந்தியா செய்திகள் ஜோதிடம்

உயிரின் ஓசையே ஓம் என ஆன்மீகத்தின் மீது அதிக பற்றுள்ளவர்கள் நம்புகிறார்கள். நீங்கள் எப்படி?

கருப்பையில் இருக்கும் குழந்தை ‘ஓம்’ வடிவில்தான் உள்ளது என்பதே, ‘ஓம்’ என்ற மந்திர சொல்லுக்கும், மனித வாழ்விற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை உணர்த்தும்..

தொப்புளில் பிராணன் எனப்படும் மூச்சுக் காற்று உள்ளது. ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்வான் என்பதற்கு ஏற்ப, எவ்வளவு மூச்சுகள் இருக்க வேண்டுமோ அவ்வளவு மூச்சும் அநேக சுற்றுகளாய் அதில் இருக்கும். அதிலிருந்து இரவு பகலாய் மூச்சு செலவழிந்து கொண்டே இருக்கிறது.

இறுதியில் தொப்புளில் மூச்சு எதுவுமில்லாமல் காலியாகிவிடும். மூச்சு தொப்புளில் காலியாகிவிட்டால் உயிர் போய்விட்டது என்று சொல்வார்கள். இந்த மூச்சே உயிர் என்றும், பிராணன் என்றும் சொல்லப்படும்.

நாம் உயிர் வாழ சுவாசிக்கிறோம்.

நமக்குத் தேவையான வாயு நாசித்துவாரங்கள் வழியாக நுரையீரலுக்குச் சென்று அதை இயங்கச் செய்யும். இது நாம் சுவாசிக்கும் முறை.

ஆனால் யோகியர்களும் சித்தர்களும் யோக நிலையில் இப்படி வெளிக்காற்றை நாசிகள் வழியாக சுவாசிப்பதில்லை. அவர்கள் சுவாசிக்கும் முறையே வேறு. கருப்பையில் இருக்கும் குழந்தை சுவாசிப்பதைப் போலவே அவர்கள் சுவாசிப்பர். அதாவது தொப்புளைச் சுற்றியிருக்கும் பிராணன் எனப்படும் வாயுவைக் கொண்டு நுரையீரலை இயங்கச் செய்வர்.

தொப்புளில் ‘ஓ’ என்ற எழுத்தின் ஒலி வடிவம் தொடங்குகிறது என்றால், தொப்புளைச் சுற்றி காற்று இருக்கிறது என்பது தெளிவு. அந்த காற்றே உயிர்க்காற்று. அதுவே நம் உடம்பிற்கு உயிரூட்டுவதால் உயிர்மூச்சு.

இப்படி உயிராகிய- பிராணனாகிய வாயுவிலிருந்து உருவெடுத்து மேலெழும்பி வருவதே ‘ஓம்’ எனும் மந்திரம். பிராணனிலிருந்து வெளிப்படுவதாலேயே இது பிரணவ மந்திரம் என்றாயிற்று.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்