உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

‘தமிழோசை ஆனந்தி’ என அறியப்பட்டஆனந்தி சூரியப்பிரகாசம் காலமானார்

  • Feb 23, 2025 - 07:00 AM
  • 0 Comments

‘தமிழோசை ஆனந்தி’ என தமிழ் உலகம் அறிந்திருக்கும் பி.பி.சி தமிழோசை ஆனந்தி சூரியப்பிரகாசம் கடந்த 21-02-2025 அன்று லண்டனில் காலமானார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரான ஆனந்தி சூர்யப்பிரகாசம், இலங்கை வானொலியில் சனாவின தயாரிப்பில் உருவான பல நாடகங்களில் நடித்துப்புகழ்பெற்றார். சமகாலத்தில் அறிவிப்பாளராகவும் திகழ்ந்தார். 1970 காலகட்டத்தில் இங்கிலாந்தை சென்றடைந்த அவர், பி.பி.சி தமிழோசையின் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்றிவந்தார். பின்னர், நிரந்தர அறிவிப்பாளராகிப் பொறுப்புகள் ஏற்றுச் செயற்பட்டவர், மூன்று தசாப்தங்களாக பி.பி.சி தமிழோசையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அத்துடன் […]

இலங்கை படையினருக்கும் பாதாள உலக குழுக்களுடன் தொடர்புண்டு என பாதுகாப்பு செயலாளர் ஒப்புதல்

  • Feb 22, 2025 - 10:59 PM
  • 0 Comments

சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்றுள்ள ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்தகைய நபர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். ஆயுதப் பயிற்சி பெற்று இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை மிகக் குறுகிய […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

காட்டிக்கொடுத்தால் 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படுமென பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார்

  • Feb 22, 2025 - 10:48 PM
  • 0 Comments

நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற 58 குழுக்களும், அவற்றைப் பின்பற்றுகின்ற 1400 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். சமூகத்தில் ஆயுத புலக்கம் அதிகரித்துள்ளதால் அவற்றால் இடம்பெறக் கூடிய குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ரி- 56 ரக துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

புதிய அரசியலமைப்பு நிட்சயம் உருவாக்கப்படுமென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

  • Feb 22, 2025 - 10:36 PM
  • 0 Comments

காலாவதியாகியுள்ள அரசியலமைப்பை இரத்துச் செய்து மக்களின் விருப்பத்துடன், புதிய அரசியலமைப்பை நிச்சயம் உருவாக்குவோம். தேசிய நல்லிணக்கம், ஜனநாயகம் ஆகியவற்றை ஸ்திரப்படுத்துவோம். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை வெகுவிரைவில் இரத்துச் செய்வோம் என வெளிவிவகாரம் , வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான 5 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்

  • Feb 22, 2025 - 07:12 PM
  • 0 Comments

மன்னார் மறை மாவட்டத்தின் 4 வது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருட் திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் இன்றைய தினம் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பேரருட்திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மடு திருத்தலத்தில் வைத்து ஆயராக அருட்பொழிவு செய்யும் நிகழ்வு நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழீழ விடுதலை புலிகள் உட்பட 15 அமைப்புகளுக்கு தடை விதித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

  • Feb 22, 2025 - 07:02 PM
  • 0 Comments

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தொழிற்படுகின்ற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குழுக்களிடமிருந்து பெறப்படுகின்ற உதவியுடன் அந்த அமைப்பை மீள் உருவாக்குவதற்கான எத்தனிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்த குற்றச்சாட்டில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழ் மக்களை தமிழ் மக்களே ஆளும் அரசியல் திர்வு வழங்கும் வரை ஓயப்போவதில்லையென சாணக்கியன் எம்பி தெரிவித்துள்ளார்

  • Feb 22, 2025 - 06:25 PM
  • 0 Comments

படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியும்,எம்மை நாம் ஆளும் அரசியல் தீர்வும் வேண்டும் என்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை தாமதப்படுத்துவது இந்த நாட்டை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். மக்களை ஏமாற்றினால் கோட்டபய ராஜபக்ஷவை காட்டிலும் மிக மோசமான விளைவை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான 5 ஆம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில்; மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இருவர் படுகாயம்

  • Feb 22, 2025 - 06:16 PM
  • 0 Comments

மட்டக்களப்பு, ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த 5 பேர் கொண்ட குழு ஒன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (20-02-2025) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது, கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கோவில் ஒன்றில் இரு சாராருக்கு இடயையே இடம்பெற்ற தகராற்றினையடுத்து பழிவாங்கும் நோக்கத்தில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வரி ஏய்ப்பு செய்த குற்றவாளி அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவர் விடுதலை

  • Feb 22, 2025 - 06:07 PM
  • 0 Comments

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவர் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவர் கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நீதிமன்றம் […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் உயிரிழப்பு

  • Feb 22, 2025 - 06:01 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் வைரவர் கோவில் பகுதியில் கடந்த 20 ம் திகதி ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்தவராவார். குறித்த இளைஞன் தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp