உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை பயங்கரவாத சம்பவமில்லையென அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்

  • Feb 22, 2025 - 05:56 PM
  • 0 Comments

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை பயங்கரவாத சம்பவமில்லை சந்தேகநபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்க முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார் அவர் சமூக ஊடக பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்படவுள்ளனர் என்ற தகவல் உண்மை என்றால்இது பயங்கரவாத தடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்யும் செயல், இது பயங்கரவாத குற்றமல்ல, பயங்கரவாத குற்றமல்லாதவற்றிற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தும்போது அதுவழமையானதாக மாற்றப்படுகின்றது, இது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது சிவகங்கை கப்பல் !

  • Feb 22, 2025 - 05:51 PM
  • 0 Comments

நாகை துறைமுகத்திலிருந்து 83, பயணிகளுடன் இன்று காலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை நோக்கி புறப்பட்ட சிவகங்கை கப்பல் இன்று மதியம் 12.15 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இந்தியா – இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புயல், மழை, கடல் […]

உள்ளூர் கட்டுரை செய்திகள் முக்கிய செய்திகள்

அர்சுனா இராமநாதன் பார்ட் 2 ஆக உருவெடுக்க முயற்சிக்கும் வைத்தியர் முரளி வல்லிபுர நாதன்

  • Feb 22, 2025 - 01:07 PM
  • 0 Comments

வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் அண்மையில் எழுதிய கட்டுரையொன்றை வாசிக்க நேர்ந்தது. அதிலிருக்கும் சில கேள்விகளுக்கான பதில்களை பெறும் நோக்கில் எழுதப்பட்ட கருத்துக்களே இவை இலங்கையை வலதுசாரிகளோ அல்லது இடதுசாரிகளோ தான் ஆட்சி செய்வார்கள் என்பது நாமனைவரும் அறிந்ததே. வைத்தியர் முரளி வல்லிபுர நாதன் தெரிவித்துள்ள கருத்துடன் முற்றாக ஒத்துப்போக முடியாதது. ஒரு நாகரிகமான மனித சமூகம் அவ்வாறு ஒத்துப்போகாது, அதற்காக முரளி வல்லிபுர நாதனின் எல்லா கருத்துக்களையும் எதிர்க்கவேண்டிய தேவையும் இல்லை. இதுவரையிலான மாற்றங்களின் அடிப்படையில் வடகிழக்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ’ கொலைசெய்யப்பட போகின்றார் என்ற விடயம் உளவுத்துறைக்கு தெரிந்தும்; தடுக்கத் தவறியது ஏன்? ரோஹண பண்டார எம்பி

  • Feb 22, 2025 - 09:57 AM
  • 0 Comments

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார். எனினும் இதைத் தடுக்கத் தவறியதால் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், நீதிமன்ற அறைக்குள் துப்பாக்கிதாரியை கடத்த உதவிய பெண் குறித்து உளவுத்துறை முன்கூட்டியே தகவல்களைச் சேகரித்ததாகவும் கூறினார். ‘சிங்கபுர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற இந்தப் பெண் தாக்குதலுக்குத் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மக்கள் தமது தாய் மொழியில் அரச சேவைகளை பெற்றுக்கொள்வர்- பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

  • Feb 22, 2025 - 09:18 AM
  • 0 Comments

அரசியல் நிலைமை மற்றும் மொழி ரீதியான பிரச்சினைகள் காரணமாகவே இந்த நாட்டின் இனங்களுக்கு இடையில் சகவாழ்வு இல்லாமல் போயுள்ளது. எனவே முதலில் இனவாதம் அற்ற நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதன் ஊடாக ஒவ்வொரு பிரஜையும் தனது தாய் மொழியில் அரச சேவையை பெற்றுக் கொள்ளும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முஹம்மத் முனீர் முளப்பர் தெரிவித்தார். சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு நேற்று (21-02-2025) மாகும்புர, பன்னிபிட்டியவில் உள்ள தேசிய கல்வி மொழி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்;வு தொடர்பில் தமிழ்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்- சிறிதரன் எம்பி

  • Feb 22, 2025 - 09:10 AM
  • 0 Comments

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில், அரசாங்கம் எமக்கான தீர்வுத்திட்டத்தைத் தரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. மாறாக நாமனைவரும் ஒன்றிணைந்து, தமிழர்கள் சார்ந்து ஒரு கூட்டுநிலைப்பாட்டை எடுக்கவேண்டும். இப்போது நாங்கள் தான் பசியுடன் இருக்கிறோம். பசியுடன் இருப்பவர்கள் தானே என்ன தேவை என்று கேட்கமுடியும்? உணவை வைத்திருப்பவன், பசியுடன் இருப்பவனைப் பார்த்து ‘உனக்கு என்ன உணவு வேண்டும்?’ என்று கேட்கப்போவதில்லை. எனவே எம்முடைய பசிக்குரிய உணவு எதுவென்பதை நாம் தான் தீர்மானிக்கவேண்டும் என இலங்கைத் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்பில் பொலிஸார் நடத்pய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

  • Feb 22, 2025 - 08:57 AM
  • 0 Comments

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 21-02-2025) மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்டுவதற்காக பொலிஸார் கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரிகள் இருவரையும் அழைத்துச் சென்றபோது, பொலிஸாரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்கள் இருவரும் சுட முயன்ற போதே பொலிஸார் பதில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தையிட்டி திஸ்ச விகாரைகட்டப்பட்டுள்ள காணி மனித புதைகுழியாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது- அருட்தந்தை மா.சத்திவேல்

  • Feb 21, 2025 - 09:24 PM
  • 0 Comments

சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா என சந்தேகம் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். அவரால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, படையினரை பொறுத்தவரையில் தமிழர் பிரதேசத்தில் நாட்டின் சட்டங்கள் அவர்களின் இரும்பு சப்பாத்தின் கீழ் என்பதற்கு இன்னொரு அடையாளமே அவர்களால் தையிட்டியில் தனியார் காணியில் கட்டப்பட்ட திஸ்ஸ […]

நினைவஞ்சலி

7ம் ஆண்டு நினைவஞ்சலி!

  • Feb 21, 2025 - 07:24 PM
  • 0 Comments

அமரர் வேலுப்பிள்ளை மாணிக்கம்; அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி பிறப்பு 24.10.1939 இறப்பு 12.03.2018 கச்சாய் தெற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம். தகவல்:- குடும்பத்தினர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னாரில் கனிய மணல் அகழ்வை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவகரன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்

  • Feb 21, 2025 - 05:02 PM
  • 0 Comments

இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே, மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு (டைட்டானியம்) கரையோர மண் அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை. ஆகவே, எமது கோரிக்கையை புரிந்துகொண்டு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp