உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அத்து மீறும் இந்திய கடற்தொழிலாளர்களுக்கெதிராக எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் – தீவக கடற்தொழில் அமைப்பு

  • Feb 21, 2025 - 04:55 PM
  • 0 Comments

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் வடக்கில் குறிப்பாக எமது தீவக பிரதேச கடற்தொழிலாளர்கள் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்துமாறு நாம் பல போராட்டங்கள் கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதற்கான தீர்வு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அர்ச்சுனா எம்பி நல்லவரா கெட்டவரா? விசயமா?விசரா என ஆராய்நத குழு அறிக்கையை வெளியிட்டது

  • Feb 21, 2025 - 12:46 PM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை மற்றும் நடவடிக்கைகள் குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் பிரதித் தவிசாளரான ஹேமாலி வீரசேகரவின் தலைமையில் விஜித ஹேரத் மற்றும் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக சபாநாயகர் தெரிவித்தார். அத்துடன், இந்த அறிக்கையானது, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் என […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளி இராணுவத்தில் இருந்தவர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் கைது

  • Feb 21, 2025 - 12:40 PM
  • 0 Comments

எவராக இருப்பினும் பாரபட்சமின்றி சட்டம் அமல்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரி, இராணுவ அதிகாரி ,குற்றவாளி எனப் பாராமல் அனைவருக்கும் எதிராகச் சட்டம் அமல்படுத்தப்படும் எனக் கூறினார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். மித்தெனியவில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரி ஒருவரும், கணேமுல்ல சஞ்சீவ கொலையில் தொடர்புடைய ஒரு காவல்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கொத்துரொட்டி கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

  • Feb 21, 2025 - 12:25 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் கொத்து ரொட்டி தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில், அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரான ம.ஜெயப்பிரதீப் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது , சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து தயாரித்த உணவக உரிமையாளருக்கும், மற்றுமொரு உணவகத்தில் மலசல கூடத்தினுள் மின் மோட்டாரை இயக்கி, நீர் வழங்கி வந்த நபருக்கும் எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைகள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

லண்டனில் யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்

  • Feb 21, 2025 - 12:09 PM
  • 0 Comments

இலங்கை பாடகி யோகானியின் இசைநிகழ்ச்சியொன்று இன்று லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான அரங்கில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு புலம் பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யொகானி போர்க்குற்றவாளிகளை போற்றும் பாடல்களை பாடியதை சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன டிசில்வாவின் மகளான யொகானி அவரை பாராட்டி பாடியுள்ளதை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இனப்படுகொலையை ஆதரிப்பவரை,இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை பாரட்டுபவரை லண்டனில் மாத்திரமல்ல […]

உலகம்

அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குநராக இந்தியரான காஸ் படேல் நியமனம்

  • Feb 21, 2025 - 12:03 PM
  • 0 Comments

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி; தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த மாதம் டிரம்ப் ஜனாதிபதி;யாக பொறுப்பேற்றார். அதற்கு முன் தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் மற்றும் கேபினட் அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை அவர் அறிவித்தார். இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஸ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார். அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், […]

உலகம்

போப் ஆண்டவர் பிரான்சிஸின் உடல்நிலை சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளதாக வட்டிகான் அறிவித்துள்ளது

  • Feb 21, 2025 - 07:56 AM
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயதுடைய போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்திவந்தார். தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார். இதற்கிடையே, ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் போப் பிரான்சிஸ் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து […]

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்கர்களின் வரிப்பணத்தில் இந்தியர்களுக்கு 182 கோடி ரூபாவினை பைடன் கொடுத்ததாக டிரம்ப் குற்றச்சாட்டு

  • Feb 21, 2025 - 07:45 AM
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கிடையே இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 2012 முதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படும் 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை அறிவித்தது. இந்தியாவிடம் நிறைய பணம் இருப்பதாகவும், தங்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டியதில்லை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

15 மில்லியன் ரூபாவுக்காக கணேமுல்ல சஞ்சீவவை போட்டுத்தள்ளியதாக கொலையாளி ஒப்புதல் வாக்குமூலம் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவவை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வழங்கிய வாக்குமூலத்தில்,… கொலை செய்வதற்கு பல நாட்களுக்கு முன்பு துப்பாக்கிதாரி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தமை விசாரணைகளின் போது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. துப்பாக்கிதாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாதாள உலக உறுப்பினர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் அவிஸ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கணேமுல்ல சஞ்சீவவைக் கொன்றதாக அவர் தெரிவித்தார். துப்பாக்கிதாரி, இந்தக் கொலை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் 200,000 ரூபாய் ஊதியமாக தனக்கு வழங்கியதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் நீதிமன்ற வளாகத்திற்குள் சம்பந்தப்பட்ட பெண் , துப்பாக்கியை தன்னிடம் கொடுத்த பிறகு, அதை தனது இடுப்புப் பட்டையில் மறைத்து வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணை சிறிது காலமாகத் தெரியும் என்றும், அதனால் அவருடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, வாடகை வாகன செயலி மூலம் வாடகைக்கு வாகனம் ஒன்றை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு அருகில் இருந்து நீர்கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு பகுதிக்குச் சென்றதாக சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளிடம் மேலும் ஒப்புக்கொண்டுள்ளார். தன்னை அழைத்துச் செல்ல கார் ஒன்று அவ்விடத்திற்கு வருவதாக கூறிய போதும் அவ்வாறு வாகனங்கள் எதுவும் வராததால் இவ்வாறு செய்ததாகக் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூறியுள்ளார். 15 மில்லியன் ரூபாவுக்காக கணேமுல்ல சஞ்சீவவை போட்டுத்தள்ளியதாக கொலையாளி ஒப்புதல் வாக்குமூலம் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவவை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வழங்கிய வாக்குமூலத்தில்இ… கொலை செய்வதற்கு பல நாட்களுக்கு முன்பு துப்பாக்கிதாரி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தமை விசாரணைகளின் போது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. துப்பாக்கிதாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில்இ பாதாள உலக உறுப்பினர்களான கெஹல்பத்தர பத்மேஇ கமாண்டோ சலிந்த மற்றும் அவிஸ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கணேமுல்ல சஞ்சீவவைக் கொன்றதாக அவர் தெரிவித்தார். துப்பாக்கிதாரிஇ இந்தக் கொலை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டதாகவும்இ சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் 200இ000 ரூபாய் ஊதியமாக தனக்கு வழங்கியதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் நீதிமன்ற வளாகத்திற்குள் சம்பந்தப்பட்ட பெண் இ துப்பாக்கியை தன்னிடம் கொடுத்த பிறகுஇ அதை தனது இடுப்புப் பட்டையில் மறைத்து வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணை சிறிது காலமாகத் தெரியும் என்றும்இ அதனால் அவருடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகுஇ வாடகை வாகன செயலி மூலம் வாடகைக்கு வாகனம் ஒன்றை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு அருகில் இருந்து நீர்கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு பகுதிக்குச் சென்றதாக சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளிடம் மேலும் ஒப்புக்கொண்டுள்ளார். தன்னை அழைத்துச் செல்ல கார் ஒன்று அவ்விடத்திற்கு வருவதாக கூறிய போதும் அவ்வாறு வாகனங்கள் எதுவும் வராததால் இவ்வாறு செய்ததாகக் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூறியுள்ளார். பின்னர் துப்பாக்கியைக் கொண்டு வந்த பெண்ணுடன் கடை ஒன்றுக்குச் சென்று ஆடைகளை வாங்கியதாக அவர் கூறினார். பின்னர் நீர்கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் இருந்து வாடகைக்கு எடுத்த வானில் கல்பிட்டிக்கு பயணம் செய்துஇ இந்தியாவுக்கு தப்பிச் செல்லத் தயாரானதாக அவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்இ தன்னிடம் இருந்த போலி அடையாள அட்டைகள் அனைத்தும் அவிஸ்க என்ற குற்றவாளியால் தயாரிக்கப்பட்டவை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல்இ கல்கிஸ்ஸைஇ வட்டரப்பல பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலையை தானே செய்ததாக அவர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் துப்பாக்கியைக் கொண்டு வந்த பெண்ணுடன் கடை ஒன்றுக்குச் சென்று ஆடைகளை வாங்கியதாக அவர் கூறினார். பின்னர் நீர்கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் இருந்து வாடகைக்கு எடுத்த வானில் கல்பிட்டிக்கு பயணம் செய்து, இந்தியாவுக்கு தப்பிச் செல்லத் தயாரானதாக அவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர், தன்னிடம் இருந்த போலி அடையாள அட்டைகள் அனைத்தும் அவிஸ்க என்ற குற்றவாளியால் தயாரிக்கப்பட்டவை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல், கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலையை தானே செய்ததாக அவர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  • Feb 21, 2025 - 07:34 AM
  • 0 Comments

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவவை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வழங்கிய வாக்குமூலத்தில்,… கொலை செய்வதற்கு பல நாட்களுக்கு முன்பு துப்பாக்கிதாரி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தமை விசாரணைகளின் போது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. துப்பாக்கிதாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாதாள உலக உறுப்பினர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் அவிஸ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழைய மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்!

  • Feb 21, 2025 - 07:07 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்ல அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பாடசாலையில் கடந்த வருடம் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெற்ற போது இல்லங்கள் கார்த்திகைப் பூ மற்றும் பீரங்கி அமைப்பு போன்ற வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாடசாலையின் நிர்வாகத்தினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அந்த விசாரணைகள் இதுவரை முடிவுக்கு வரவில்லை. இது இவ்வாறு இருக்கையில் இந்த […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp