இன்றைய (20-02-2025) ராசிபலன்கள்
இன்றைய ராசிபலன்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கத்தை இணங்கச்செய்வதற்குரிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், அவ்வாறு இணங்காத பட்சத்திலேயே இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவரவேண்டியிருக்கும் எனவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (18-02-2025) கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் […]
மன்னார் நீதிமன்றத்தின் வெளியில் படுகொலை, கொழும்பு நீதிமன்றத்துக்குள் படுகொலை. சட்டத்தரணியை போன்று வேடமிட்டு கொலையாளிகள் நீதிமன்றத்துக்குள் செல்கிறார்கள். இந்த செய்தி சர்வதேசத்துக்கு சென்றால் யார் நம்பிக்கையுடன் இலங்கைக்கு வந்து முதலீடு செய்வார்கள். கடந்த காலங்களை பற்றி பேசிக்கொண்டிருக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். […]
பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தின் போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அவர் மேலும் உரையாற்றியதாவது, கொழும்பு நீதிமன்றத்தில் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளேன். நான் பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். அதனால் பாராளுமன்ற அமர்வு காலத்திலாவது எனக்கு பாதுகாப்பை வழங்க நடவடிக்கை […]
இலங்கையுடன் தமது உறவை மேலும் வலுபடபடுத்த மாலைதீவு விரும்புகிறது என மாலைத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் டொக்டர் அப்துல்லா கலீல் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்த பின், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மாலைத்தீவு அமைச்சர், இலங்கை நிலைத்த பொருளாதார வளர்ச்சி நோக்கி செல்வது மகிழ்ச்சியளிக்கின்றதென தெரிவித்தார். வெளியுறவுத்துறை அமைச்சரின் விஜயத்தின் போது, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, சுற்றுலா, சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கல்வி மற்றும் தொழிற்பயிற்சி, மீன்பிடி, சுகாதாரம், இளைஞர் முன்னேற்றம், விளையாட்டு,;, […]
இன்று கொழும்பு கணேமுல்ல சந்தீவா கொலையாளியான முக்கிய சந்தேகநபர் புத்தளத்தில் கைது செய்யப்ட்டுள்ளார். புத்தளம் பலாவியா பகுதியில்கொழும்பில் நீதிமன்ற துப்பாக்கிதாரியென சந்தேகத்pல் ஒருவர் கைது இன்று கொழும்பு கணேமுல்ல சந்தீவா கொலையாளியான முக்கிய சந்தேகநபர் புத்தளத்தில் கைது செய்யப்ட்டுள்ளார். புத்தளம் பலாவியா பகுதியில் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதான மொஹமட் அஸ்மான் ஷெரிஃப்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கணேமுல்ல சந்தீவா இன்று காலை கொழும்பு; நீதிமன்றத்தில் துப்பாக்கிச் […]
வடக்கு மாகாணத்தில் நீண்ட கால யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மூன்று மக்கள் குழுக்கள் உள்ளன. பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இவர்கள் எமது சமூகத்தில் மூன்றில் ஒரு பகுதியினராக உள்ளனர். இவர்களை முன்னேற்ற வேண்டும். எமது மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கே விசேட திட்டங்களை கொண்டு வர வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2025 ஆம் […]
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்று மாலை மூவர் மீது மோசமாக தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் வவுனியா பகுதியில் இருந்து (NP ஊயுர் – 0636) என்ற இலக்கமுடைய வாகனத்தில் குண்டர்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி, கற்களால் தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகின்றது. வாகனத்தில் வருகை தந்த தாக்குதல் கும்பல் வாகனத்திற்குள் வாள்களை […]
கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 20ஆம் திகதி வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்திற்கு, நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையானது மக்களது காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட நிலையில், அந்த விகாரைகயை அகற்றுமாறு கோரி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ். நூலகம் டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டும் எனவும், அரச வேலைவாய்ப்புக்கள் வெற்றிடங்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப வடக்கு, கிழக்குக்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார். யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வரவு – செலவுத் திட்டம் வெளியாவதற்கு முன்னரே, ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. புதிய அரசாங்கம் இடதுசாரி கொள்கைகளை பின்பற்றுவதாக சொல்லப்படுகின்ற புதிய […]