செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் செப்பனிடப்படவேண்டிய வீதிகள் விபரம் இனிதான் சேகரிக்க வேண்டும்- அரச அதிபர் பிரதீபன்

  • Feb 18, 2025 - 06:34 PM
  • 0 Comments

யாழ். மாவட்டத்தில் உள்ள வீதிகளின் முழுமையான விபரங்கள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தயாரிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு கையளிக்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்துக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தை நடத்தியபோது யாழ். மாவட்டத்துக்கு வீதிகளை புனரமைக்க எவ்வளவு நிதி தேவை, எத்தனை கிலோ மீற்றர் தூர வீதிகள் புனரமைக்கப்படவேண்டும் என்ற கேள்விகளை கேட்டபோது அதற்கு முறையான பதில்களை அரசாங்க அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை. மேலும், […]

செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் தாயுடன் உறங்கிய குழந்தை மர்மமாக இறந்துள்ளது. சடலம் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

  • Feb 18, 2025 - 06:27 PM
  • 0 Comments

வீடொன்றில் தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, கடுக்காமுனை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. பிறந்து ஒன்றரை மாதமேயான இந்த குழந்தை கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு தாய்ப்பால் அருந்திவிட்டு தாயுடனே உறங்கியுள்ளது. மறுநாள் திங்கட்கிழமை அதாவது நேற்று (17-02-2025) அதிகாலை குழந்தைக்கு பால் புகட்டுவதற்காக தாய் குழந்தையை எழுப்பியபோது குழந்தை சுவாசமின்றி இருந்துள்ளது. அதனையடுத்து, உடனடியாக குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, குழந்தை முன்னரே இறந்துவிட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு […]

முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் வீடொன்றின்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

  • Feb 18, 2025 - 06:19 PM
  • 0 Comments

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (17-02-2025) இரவு இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் இடம்பெற்ற வேளை குறித்த வீட்டில் யாரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டின் உரிமையாளரைப் பழிவாங்கும் நோக்கில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் வீட்டின் சில பகுதிகள் பாதிப்படைந்துள்ளது இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

முக்கிய செய்திகள்

வரவு செலவு திட்ட எதிரொலி உணவுப்பொருட்கள் இன்று முதல் விலை அதிகரிப்பு

  • Feb 18, 2025 - 06:05 PM
  • 0 Comments

சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாவரவு செலவு திட்ட எதிரொலி உணவுப்பொருட்கள் இன்று முதல் விலை அதிகரிப்பு சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவிக்கையில்இ இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. […]

செய்திகள் முக்கிய செய்திகள் ஜோதிடம்

யாழ்ப்பாணம் கேதீஸ்வர பாத யாத்திரை நாளை மறுதினம் ஆரம்பம்

  • Feb 18, 2025 - 05:55 PM
  • 0 Comments

மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது. செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து பூசை வழிபாடுகளுடன் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கவுள்ள யாத்திரை எதிர்வரும் 26ம் திகதி திருக்கேதீச்சரத்தை சென்றடையவுள்ளது. பாதயாத்திரையில் பங்கேற்க விரும்புவோர் 0776132176 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்  

செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் டிப்பர் மோதி ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

  • Feb 18, 2025 - 05:39 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலையே ஒருவர் உயிரிழந்தார் .அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். விபத்து தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழ் அரசுக்கட்யிலிருந்து சிறிதரனை நீக்க முடியாதென அதன் பதில் தலைவர் சி.வி . கே சிவஞானம் திட்டவட்டம்

  • Feb 18, 2025 - 05:26 PM
  • 0 Comments

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதன் ஊடாகவே அமைத்து தேசியத்தையும் இருப்பையும் காத்துக்கொள்ள முடியும் என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி . கே சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமாகவும், அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இன்று தொடக்கம் 25ம் திகதி வரை நடைபெறும்

  • Feb 18, 2025 - 05:16 PM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

செய்திகள் முக்கிய செய்திகள்

நாகப்பட்டினத்திற்கும் யாழ்பட்டினத்திற்குமான கப்பல் சேவை 22ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது

  • Feb 18, 2025 - 05:09 PM
  • 0 Comments

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும். www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும். இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து […]

செய்திகள் முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ஸ பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்

  • Feb 18, 2025 - 05:06 PM
  • 0 Comments

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமல் ராஜபக்ஷ 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகை இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp