உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அம்பாறையில் யுவதிகளை தொந்தரவு செய்பவர்கள், பற்றி தகவல் வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

  • Mar 14, 2025 - 01:47 PM
  • 0 Comments

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள், பெண்பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்தவாறு வீதியில் பயணிப்பவர்கள், அதிக ஒளி, ஒலி எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நேற்று (13-03-2025) கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வீதி போக்குவரத்து சீர்கேடு, கலாசார சீர்கேடு தொடர்பான முறைப்பாடுகள், சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் […]

உலகம்

உக்ரைனுடன் போர் நிறுத்தத்துக்கு தயார் என ரஸ்சியா அறிவித்துள்ளது

  • Mar 14, 2025 - 01:34 PM
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. முதலில் ரஷியா- உக்ரைன் எல்லையில் உள்ள உக்ரைனின் பெரும்பாலான பகுதியை ரஷியா பிடித்தது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்க, உக்ரைன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தது. இதனால் ரஷியா பெரும்பாலான இடங்களில் பின்வாங்கியது. இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை 3 வருடங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. தற்போது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரஷியா-உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு […]

உலகம் செய்திகள் வினோத உலகம்

கனடியர்களிடையே வேலை இழப்புக்கள் தொடர்பில் பதற்றம் அதிகரித்துள்ளது

  • Mar 14, 2025 - 01:26 PM
  • 0 Comments

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட புதிய கருத்துக்கணிப்பின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவுடன் நடக்கும் வர்த்தக போரின் விளைவாக வேலை இழப்புக்கான அச்சம் ஏற்படுத்துவதாக 40 வீதமான கனடியர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் பல தொழில் நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை குறைக்கத் தொடங்கியுள்ளன. லெஜர் கருத்துக்கணிப்பில், மார்ச் 7 முதல் 10 வரை 1,500க்கும் மேற்பட்ட கனடியர்களை மாதிரியாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒண்டாரியோ மாநிலத்தில் 50மூ-க்கு மேற்பட்ட பணியாளர்கள் வேலை பாதுகாப்பு தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது நாட்டின் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் மருத்துவரின் வாக்குமூலம் பதிவானது. வல்லுறவா?உறவா?

  • Mar 14, 2025 - 01:18 PM
  • 0 Comments

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்றன. சந்தேக நபர் நேற்று அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்தப்பட்ட பின்னர் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்போது சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் ‘பி’ அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். அதன்படி, சம்பவத்தை எதிர்கொண்ட வைத்தியரின் சுய வாக்குமூலத்தை காவல்துறையின நீதிமன்றில் முன்வைத்துள்ளனர். ‘நான் 10 ஆம் திகதி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நாட்டிலுள்ள பெண் கிராம அலுவலர்கள் இரவு பணிகளிலிருந்து விலகல்

  • Mar 14, 2025 - 01:04 PM
  • 0 Comments

அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளை காரணம் காட்டி, இன்று தொடக்கம் அனைத்து பெண் கிராம அலுவலர்களும் இரவுப் பணிகளில் ஈடுபட மாட்டார்கள் என்று இலங்கை கிராம அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது. இரவு நேரக் கடமைகளை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பற்ற அல்லது மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் அமைந்துள்ள அலுவலகங்கள் மூடப்படும் என்றும் சங்கம் அறிவித்துள்ளது அத்துடன் உத்தியோகபூர்வ பணிகள் மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படும் என்றும் சங்கத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் ஷாமலி வத்சல குலதுங்க […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பெண் வைத்தியர் மீதான பாலியல் துஷ்பிரயோக சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு மீட்பு

  • Mar 14, 2025 - 12:56 PM
  • 0 Comments

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை (10-03-2025) இரவு பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் வைத்தியரிடமிருந்து திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை கண்டுபிடிப்பதற்காக கல்நேவ பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து அநுராதபுரம், கல்நேவ பிரதேசத்தில் உள்ள பிரதான சந்தேக நபரின் வீட்டை இன்று சோதனையிட்டுள்ளனர். இதன்போது […]

உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

திருகோணமலையில் இரண்டு வயோதிப பெண்கள் வெட்டிக்கொலை 15 வயது மாணவி காயம்

  • Mar 14, 2025 - 12:46 PM
  • 0 Comments

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 68 வயதுடைய பெண் மற்றும் அவரது 74 வயதுடைய சகோதரி ஆகிய இருவருமே வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், உயிரிழந்தவர்களில் ஒருவரின் 15 வயது மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த கொலை சம்பவத்தில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தீவிர விசாரணைகளை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையின் பெக்கோ டிரெயில் உலகின் சிறந்த சுற்றுலாத் தளமாக தெரிவு

  • Mar 14, 2025 - 12:38 PM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 சுற்றுலாத் தளங்களின் பட்டியலை ‘டைம்’ சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ‘பெக்கோ டிரெயில்’ முதலிடம் பிடித்துள்ளது. ‘பெக்கோ டிரெயில்’ என்பது இலங்கையின் மத்திய மலைநாட்டின் வழியாக 300 கிலோமீட்டர் ஒரு தொலைதூரப் நடைப்பயணமாகும். இந்த 22 நிலை நடைப்பயணமானது ஆசியாவின் தெற்கில் உள்ள மிகச்சிறந்த சூழலியல் மற்றும் மலைப் பகுதிகள் வழியாக அழைத்துச் செல்லும். நடைப்பயணம் கண்டியில் இருந்து ஆரம்பித்து ஹப்புத்தளை, எல்ல வழியாக நுவரெலியாவுக்குச் செல்கிறது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியாவில் 4 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தமிழரசுக்கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

  • Mar 14, 2025 - 12:28 PM
  • 0 Comments

வவுனியா நகர சபை உட்பட நான்கு சபைகளிலும் போட்டியிட இலங்கை தமிழ் அரசு கட்சி இன்று வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைய, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகர சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கெதிராக இன்றும் போராட்டம்

  • Mar 13, 2025 - 09:28 PM
  • 0 Comments

யாழ். தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிரான போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது குறித்த கட்டுமானமானது மக்களது காணியை அபகரித்து கட்டியுள்ள நிலையில் காணி உரிமையாளர்களாலும், பொதுமக்களாலும், அரசியல் பிரதிநிதிகளாலும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றமை வழமை. அந்தவகையில் இன்றைய தினமும் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்.ஐங்கரநேசன், […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp