அமெரிக்கா உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியை நிறுத்தியதை ரஸ்யா வரவேற்றுள்ளது உலகம்

அமெரிக்கா உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியை நிறுத்தியதை ரஸ்யா வரவேற்றுள்ளது

  • Mar 4, 2025 - 10:25 PM
  • 0 Comments

உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியை இடைநிறுத்தும் அமெரிக்காவின் தீர்மானத்தை வரவேற்றுள்ள ரஸ்யா தனது நாட்டிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு உண்மை என்றால் இது உக்ரைன் அரசாங்கத்தை சமாதான முயற்சிகளை நோக்கி உண்மையாகவே திருப்பிவிடும் என கிரெம்ளின் பேச்சாளர் திமிட்ரிவ் பெஸ்கோ தெரிவித்துள்ளார். சமாதானத்திற்கான மிகச்சிறந்த பங்களிப்பு இதுவென அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவதை நிறுத்திக்கொண்டால் உக்ரைனிற்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதற்கு ஐரோப்பிய நாடுகள் முயலக்கூடும் என தெரிவித்துள்ள […]

நீதிமன்ற கொலைக்கு உதவிய இஷாரா செவ்வந்தி இந்தியா சென்றுள்ளார் உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நீதிமன்ற கொலைக்கு உதவிய இஷாரா செவ்வந்தி இந்தியா சென்றுள்ளார்- பொலிஸ்

  • Mar 4, 2025 - 09:03 PM
  • 0 Comments

புதுக்கடை நீதிமன்றத்தில் ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் தடுக்கப்பட்டிருந்த்தாகவும் கூறியுள்ளனர். எனினும், இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்திற்கொண்டு, செவ்வந்தியைப் பற்றிய அனைத்து தகவல்களும் இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் வசிக்கும் தேடப்படும் குற்றவாளிகளைக் கைதுசெய்து நாடு கடத்துவதற்கு இந்தியா […]

மனித எலும்புகள் மீட்டததையடுத்து மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மனித எலும்புகள் மீட்டததையடுத்து மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஐவரை பாதுகாப்பில் ஈடுபடுத்த நீதிமன்றம் உத்தரவு

  • Mar 4, 2025 - 08:51 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள சித்துபாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு காவல்துறைப் பாதுகாப்புக்கு மேலதிகமான கண்காணிப்பு பணிக்கு மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஐவரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கினுடைய கலந்தாய்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது குறித்த கலந்துரையாடலில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பிலும், முறைப்பாட்டாளர் சார்பிலும் சட்டத்தரணிகளும், நல்லூர் பிரதேச […]

யாழ்ப்பாணம் கொக்குவில் வாள் வெட்டு உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வாள் வெட்டு

  • Mar 4, 2025 - 08:46 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞனின் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் உள்ள கடை ஒன்றின் களஞ்சியசாலையில் , களஞ்சிய சாலை பொறுப்பாளராக குறித்த இளைஞன் வேலை செய்து வருகின்றனர். அந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த இருவர் , களஞ்சியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வேலையில் இருந்த இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வாள் வெட்டில் இளைஞனின் கை விரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில் , […]

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா இரு உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா இரு தினங்கள் நடைபெறவுள்ளது

  • Mar 4, 2025 - 08:35 PM
  • 0 Comments

இந்திய-இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள 3,464 பெயர் பதிவு செய்துள்ளனர். கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். மீனவர்கள் தங்களின் வழிபாட்டுக்காக கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயத்தை 1913-ம் […]

தேசிய மக்கள் சக்தி அரசை ஐ.எம்.எப் பாராட்டியுள்ளது உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசை ஐ.எம்.எப் பாராட்டியுள்ளது

  • Mar 4, 2025 - 08:22 PM
  • 0 Comments

இலங்கையின் கையிருப்புக்கள் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் ஊடாக அடைவதற்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் அரைவாசியை அடைந்திருப்பதாகவும், இது பெரிதும் வரவேற்கத்தக்க விடயம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்தது. அதனையடுத்து வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத் […]

ஆனையிறவு உப்பளத்தை இளங்குமரன் எம்பி பார்வையிட்டுள்ளார் உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஆனையிறவு உப்பளத்தை இளங்குமரன் எம்பி பார்வையிட்டுள்ளார்

  • Mar 4, 2025 - 08:17 PM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் மற்றும் ஆனையிறவு உப்பளம் ஆகிய இடங்களுக்கு நேற்று (03-03-2025) விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தக்கரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் ஆனையிறவு உப்பு உற்பத்தி குறித்த கட்டிடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், கைத்தொழில் அமைச்சர் எதிர்வரும் 7ம் திகதி யாழ்ப்பாணம் வருகை தர இருக்கின்றார். […]

அரசாங்க வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

  • Mar 4, 2025 - 08:10 PM
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் வைத்தியர்களினால் நாளை புதன்கிழமை (05) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையடுத்தே பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கிழக்கில் இஸ்லாமிய தீவிரவாத குழு இயங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிழக்கில் இஸ்லாமிய தீவிரவாத குழு இயங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது

  • Mar 4, 2025 - 01:15 PM
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாத குழுவொன்று செயற்படுவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார். இந்த தீவிரவாத குழு குறித்து மேலதிக விபரங்களை பெறுவதற்கான முயற்சிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி இது குறித்து ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சில தகவல்களை தெரிவித்துள்ளர் என குறிப்பிட்டுள்ளார். இந்த அமைப்பின் செயற்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் பாதுகாப்பு தரப்பினர் மிகுந்த எச்சரிக்கை நிலையில் உள்ளனர் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை இலங்கை நிராகரித்துள்ளது உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை இலங்கை நிராகரித்துள்ளது

  • Mar 4, 2025 - 12:37 PM
  • 0 Comments

மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலகா, அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நம்பகமான மற்றும் சுயாதீனமான உள்நாட்டு செயல்முறைகள் மூலம் மனித உரிமைகள் சவால்களை எதிர்கொள்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் நடத்துதல் மற்றும் அதன் பின்னர் நமது பல தசாப்த கால ஜனநாயக நடைமுறைக்கு ஏற்ப கண்ணியமான மாற்றம் என்ற மாதிரியின்படி, கடந்த […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp