உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஹட்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்!

  • Mar 3, 2025 - 10:37 PM
  • 0 Comments

ஹட்டன், செனன் தோட்டத்தின் கே.எம் பிரிவில் இன்றுஇரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் மின்சாரக் கசிவு என சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்தில் தொழிலாளர்களின் உடைமைகள் எரிந்து நாசமாகியுள்ளன

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சித்தார்த்தனும் சி.வி.கே. சிவஞானமும் கடிதப்பரிமாறல்கள்

  • Mar 3, 2025 - 10:32 PM
  • 0 Comments

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் சம்பந்தமாக நடைமுறைச் சாத்தியமான வகையில் எமது கூட்டணியுடன் பேச்சுக்களை நடத்தக்கூடிய தீர்மானம் ஒன்றை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு மேற்கொண்டு அறியத் தருவீர்களானால் அது பற்றி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக் குழுவில் பேசி சாதகமான பதிலை தங்களுக்கு அறியத் தரமுடியும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் சித்தார்த்தன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் மேலும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’ என்ற அறிக்கை வெளியீடு வல்வெட்டித்துறையில் வெளியிடப்பட்டது

  • Mar 3, 2025 - 07:30 AM
  • 0 Comments

‘வல்வெட்டித்துறை : ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’ என்ற அறிக்கை வெளியீடும் ஊடக சந்திப்பும் நேற்று (02-03-2025) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்றது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வெளியிட்டு வைத்தனர். இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.  

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கீத் நொயார் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான ஓய்வு பெற்றுள்ள இராணுவ வீரர்கள் இருவர் பிணையில் விடுவிப்பு

  • Mar 2, 2025 - 05:27 PM
  • 0 Comments

கடந்த 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையொன்றின் ஆசிரியராக பணியாற்றி […]

293 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்

  • Mar 2, 2025 - 05:20 PM
  • 0 Comments

இலங்கையில் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் கொலைகளை நடத்தி விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு சர்வதேச காவல்துறையினர் (இன்டர்போல்) இதுவரை சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பாதாள உலக நடவடிக்கைகள் நாட்டில் முற்றாக ஒழிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு 199 சிவப்பு அறிவிப்புகள், 90 நீல அறிவிப்புகள் மற்றும் 4 மஞ்சள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளை இலங்கைக்கு […]

ஏனைய தமிழ் தேசியக்கட்சிகளுடன் சேர்ந்து உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஆராய வேண்டும்-தமிழ் சுமந்திரன்

  • Mar 2, 2025 - 05:17 PM
  • 0 Comments

இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன் எவ்விதத்தில் இத்தேர்தலை அணுக முடியும் என்றும்,தேர்தலின் பின்னர் வௌவேறு அணிகளாக போட்டியிட்டாலும் ஆட்சி நிர்வாகங்களை அமைக்கின்ற போது சேர்ந்து அமைக்கக்கூடிய வகையில்,தேர்தலுக்கு முன்னர் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இடம் பெற உள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

எரிபொருள் போதுமான அளவில் கையிருப்பிலுள்ளது- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

  • Mar 2, 2025 - 05:05 PM
  • 0 Comments

எக்காரணிகளுக்காகவும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது.பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆனந்த ராஜகருண தெரிவித்தார். எரிபொருள் விநியோகம் தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் வழமைக்கு மாறாக எரிபொருளை கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகத்தில் வரையறுக்கப்பட்ட நிலையில் தான் எரிபொருள் விநியோகிக்கப்பட்டிருக்கும், குறுகிய நேரத்தில் அளவுக்கு அதிகமாக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி சபை தேர்தலில் மணியின் மான் தனித்தே ஓடும்

  • Mar 2, 2025 - 05:00 PM
  • 0 Comments

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து தனது மான் சின்னத்தில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். சங்கு சின்னத்தில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் கட்சிகளின் பேச்சில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணி தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மே முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்நிலையில் ஈழமக்கள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ் வடமராட்சி கிழக்கில ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியை ஆட்டய போட்ட பக்தன்

  • Mar 2, 2025 - 04:54 PM
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பிலிப்பு நேரியார் ஆலயத்தில் காணிக்கை உண்டியல் நேற்று (01-03-2025 ) திருடப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றிருந்த மக்கள் குறித்த காணிக்கை உண்டியல் பெட்டி ஆலயத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் தொடர்பாக பங்குத்தந்தை மற்றும் ஆலய அருட்பணிச் சபையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரமழான் மாத நோன்பு கஞ்சி தயாரிப்பின் போது சுகாதாரத்தை பேணுவது தொடர்பான கலந்துரையாடல் சாய்ந்தமருதில் நடைப்பபெற்றது

  • Mar 2, 2025 - 04:47 PM
  • 0 Comments

ரமழான் காலத்தில் விசேடமாக தயார் செய்யப்படும் நோன்புக்கஞ்சி உணவுப் பண்டங்கள் என்பனவற்றின் சுகாதார நிலைமைகளை பேணுவது தொடர்பான கலந்துரையாடல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று (1-03-2025) நடைபெற்றது. இக்கலந்துரையாடலானது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர். ஜே. மதன் தலைமையில் நடைபெற்றது. சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியும் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் சம்மேளனத் தலைவருமான வைத்தியர் சனூஸ் காரியப்பர் இ சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ஏ.எல்.எம்.சலீம் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp