உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதிக்கு கெட்அவுட் (Get Out)சொன்னார் அமெரிக்க ஜனாதிபதி

  • Mar 1, 2025 - 04:13 PM
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவேளை இருவரும் உக்ரைன் போர் தொடர்பில் இருவரும் கடுமையான வார்த்தை பரிமாற்றங்களில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதியை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர் மாநாட்டையும் இரத்து செய்தது. ரஸ்யாவுடனான உடன்பாட்டிற்காக உக்ரைன் விட்டுக்கொடுப்புகளிற்கு தயாராகயிருக்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்த பின்னரே இருவரும் கடுமையாக உரையாட தொடங்கினார்கள். விட்டுக்கொடுப்பின்றி எந்த உடன்பாட்டிற்கும் வரமுடியாது நிச்சயமாக நாங்கள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திட்டமிட்ட வகையில் எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க முயற்சி செய்கின்றனர்- பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த

  • Mar 1, 2025 - 03:55 PM
  • 0 Comments

நாட்டில் எரிபொருள் இருப்புக்கு பற்றாக்குறை இல்லை என்று தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) நாடாளுமன்றத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் செயற்கையான எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜெயந்த இங்கு சுட்டிக்காட்டினார்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அதானி நிறுவனத்தின் நிலைப்பாட்டை எழுத்துபூர்வமாக தருமாறு அரசாங்கம் கோரிக்கை

  • Mar 1, 2025 - 03:45 PM
  • 0 Comments

மன்னாரில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகுவதாக இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமம் அறிவித்த போதிலும், மேற்கோள் காட்டப்பட்ட கட்டணங்களில் இத்திட்டத்தை தொடர பேச்சுவார்த்தை தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்த நிலையில், இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு எரிசக்தி அமைச்சு அதானி நிறுவனத்திடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது. கோடீஸ்வரர் கௌதம் அதானி தலைமையிலான அதானி கிரீன் எனர்ஜி, மன்னார் மற்றும் பூனரியில் உள்ள […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நோன்பு நாளை (01-03-2025); ஆரம்பமாகுமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

  • Mar 1, 2025 - 03:41 PM
  • 0 Comments

புனித ரமழான் நோன்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்றையதினம் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போதே, ரமழான் நோன்பு தொடர்பான அறிவிப்பு வெளியானது எனினும், நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் இல்லை என்றும் ஷஹ்பான் மாதத்தை 30ஆக பூரணப்படுத்தி ஞாயிற்றுக்கிழமை புனித நோன்பு ஆரம்பமாகும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை வழமைக்கு திரும்பியது

  • Mar 1, 2025 - 03:34 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கிளினிக் சேவைகள் இன்று முதல் வழமை போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தமது தொழிற்சங்க நடவடிக்கை நேற்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுத்திருந்தனர். இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்க முகங்கொடுத்திருந்த நிலையில் நோயாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கமைய, வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மக்கள் நலன் கருதி கிளினிக் சேவைகளை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மக்களுக்கு சுகாதார சேவைகள் எவ்வித தடங்கலுமின்றி வழங்கப்படுமென சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்

  • Mar 1, 2025 - 03:14 PM
  • 0 Comments

மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அரச துறையில் இருந்து கிடைக்கின்றதா அல்லது தனியார் துறையில் இருந்து கிடைக்கிறதா என பார்க்காது எந்தவொரு தடங்கலுமின்றி அனைவருக்கும் சுகாதார சேவைகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. மெடி கெயார் நிகழ்ச்சியின் பிரதான நோக்கங்களாக 05 உள்ளன. அதில் ஒன்று தான் சுகாதாரதத் துறை பற்றி மக்களுக்கு தெளிபடுத்தலாகும். இது மிக முக்கியமாதொன்று என சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பு – பண்டாரநாயக்க ஞபகார்த்த மாநாட்டு மண்டபத்தின் சிறிமாவோ பண்டாரநாயக்க […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரி – 56 ரக துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் தந்தால் 10 இலடசம் சன்மானம் என பொலிஸார் அறிவிப்பு

  • Mar 1, 2025 - 02:31 PM
  • 0 Comments

ரி – 56 ரக துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, துப்பாக்கிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குதமாறு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொதுமக்களின் உதவியும் அவசியம். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ். நெடுந்தீவு மக்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் சந்தித்தனர்

  • Mar 1, 2025 - 02:24 PM
  • 0 Comments

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நெடுதீவுக்கான கள விஜயம் ஒன்று ஆணையாளர் பேராசிரியர் தை.தனராஜ் தலைமையில் (28-02-2025 ) மேற்கொள்ளப்பட்டது. இந்த களவிஜயத்தின்போது நெடுந்தீவு பிரதேச மக்களது மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் நெடுந்தீவிலுள்ள பொது அமைப்புகளிடமும் பொது மக்களிடத்திலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் தை. தனராஜ் ஆணைக்குழுவின் சர்வதேச […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லைதீவில் நடமாடும் கசிப்பு பார் நடத்திய 21 வயதுடைய இருவர் கைது

  • Mar 1, 2025 - 02:16 PM
  • 0 Comments

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று (28-02-2025) கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்த போது இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசுவமடு பகுதியை சேர்ந்த 21, 26 வயதுடைய […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மலையகத்திற்கான தொரூந்து சேவை பாதிப்பு

  • Mar 1, 2025 - 11:43 AM
  • 0 Comments

பதுளை ரயில் நிலையத்திற்கும் ஹாலி எல தொரூந்து நிலையத்திற்கும் இடையிலான ரயில் மார்க்கத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மலையகத்திற்கான தொரூந்து சேவை தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கொழும்பிலிருந்து பதுளைக்கான தொரூந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு கோட்டை தொரூந்து நிலையத்திற்கும் ஒருகொடவத்தைக்கும் இடையில் உள்ள புளுமென்டால் தொரூந்து கடவையில் திருத்த வேலை இடம்பெறுவதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குறித்த பகுதி மூடப்பட்டிருக்கும் என தொரூந்து […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp