உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நீதிமன்ற படுகொலை தொடர்பில் மேலும் இருவர் கைது

  • Mar 1, 2025 - 11:20 AM
  • 0 Comments

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த 19 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு நேற்று (28-02-2025) கைது செய்துள்ளனர் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் மினுவாங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ‘கணேமுல்ல […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையின் 4 ஆவது தவணை கடனுதவிக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்

  • Mar 1, 2025 - 10:57 AM
  • 0 Comments

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலரை உள்ளடக்கிய 4 ஆவது தவணைக்கான கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுஇ 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நாட்டின் நீதிமன்றங்களில் 11,31,818 வழக்குகள் நிலுவையில்; உள்ளது- நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழு

  • Mar 1, 2025 - 07:59 AM
  • 0 Comments

நீதிமன்றக் கட்டமைப்பில் 11,31,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் காணப்படும் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய 5,785 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,572 வழக்குகளும், குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்படும் மேல்நீதிமன்றங்களில் 6,286 வழக்குகளும், வணிக மேல்நீதிமன்றங்களில் 6,146 வழக்குகளும், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களில் 3 வழக்குகளும், மேல்நீதிமன்றங்களில் 27,324 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

புதிய கடவுச்சீட்டிற்கு மேலதிகமாக 7000 ஆயிரம் ரூபா செலவுடப்படுகின்றதென முஜிபுர் எம்.பி குற்றச்சாட்டு

  • Mar 1, 2025 - 07:49 AM
  • 0 Comments

அரசாங்கம் தற்போது விநியோகிக்கும் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் இருப்பதுடன் பழைய கடவுச்சீட்டுக்கு செலவழித்ததைவிட மேலதிகமாக 6,997 ரூபா செலுத்த வேண்டி இருக்கிறதென முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (28-02-2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு,செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் செலவு தலைப்புகளின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகிப்பதில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியா மெனிக்பாமில் இருந்த 27 இளைஞர்கள்; கொலை செய்யப்பட்ட வீடியோ ஆதாரம் உள்ளது-சாணக்கியன் எம்.பி

  • Mar 1, 2025 - 07:36 AM
  • 0 Comments

கடந்த காலங்களில் கொலைகளிலும் மற்றும் சூழ்ச்சிகளிலும் ஈடுபட்ட குழுக்களுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா என்ற சந்தேகங்கள் நிலவுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (28-02-2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு,செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் செலவு தலைப்புகளின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த காலங்களில் திரிபோலி பெட்ரோன் ஊடாக இடம்பெற்ற […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாரென : ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

  • Mar 1, 2025 - 07:25 AM
  • 0 Comments

புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்தது என்றும், இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் ‘சாந்தன் துயிலாலயம்’ அங்குரார்ப்பணம்

  • Feb 28, 2025 - 01:25 PM
  • 0 Comments

எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் ‘சாந்தன் துயிலாலயம்’ சாந்தனின் தாயாரால் இன்று காலை 9 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் சாந்தனின் புகழுடல் புதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால் ‘சாந்தன் துயிலாலயம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சுமார் 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு விடுதலையான சாந்தன், குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் கடந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிக்மி மற்றும் ஊபர் சாரதிகள் மீது தாக்குதல்கள் தொடர்வதாக குற்றச்சாட்டு

  • Feb 28, 2025 - 01:10 PM
  • 0 Comments

சுற்றுலா பகுதிகளில் முச்சக்கர வண்டி வாடகை சேவை சாரதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சுற்றுலா பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. ‘பிக்மி’ மற்றும் ‘ஊபர்’ போன்ற முச்சக்கர வண்டி வாடகை சேவைகளின் சாரதிகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து உள்ளூர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சஜித் பிரேமதாஸ ஊடகப் பேச்சாளரை இன்று நியமத்துள்ளார்

  • Feb 28, 2025 - 01:06 PM
  • 0 Comments

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பிரசாத் சிறிவர்தனவுக்கான நியமனக் கடிதம் இன்று பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவனின் ‘வீட்டை காணொளியாக பதிவு செய்தவருக்கு விளக்கமறியல்

  • Feb 28, 2025 - 01:00 PM
  • 0 Comments

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கெஹெல்பத்தர பத்மே’என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவரின் மனைவியின் வீட்டை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டி நீதவான் ரன்திக லக்மாலி நேற்று (27-02-2025) உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்கள் இருவரும் நேற்றைய தினம் நீதிமன்றி்ல ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் துபாயில் உள்ள ‘சமீர்’ […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp