உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரதமர் உட்பட முக்கிய இந்திய தொழிலதிபர்களை சந்தித்தார் ரணில்

  • Mar 2, 2025 - 09:39 AM
  • 0 Comments

பிரதமர் உட்பட முக்கிய இந்திய தொழிலதிபர்களை சந்தித்தார் ரணில் டெல்லிக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (01-03-2025) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பலதரப்பட்ட பிரச்சினைகளை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் கண்ணோட்டத்தை பாராட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ‘உலகளாவிய விசேட முன்னேற்றங்கள்’ குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை இந்தியா சென்றார். உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் கடந்த இருநாட்களாக இடம்பெற்ற […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவு

  • Mar 1, 2025 - 08:17 PM
  • 0 Comments

கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் வெளிநாடு செல்வதை தடுத்து மாத்தறை நீதவான் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தேசபந்து தென்னகோனின் ஹோகந்தர மற்றும் கிரியுல்ல வீடுகளை சோதனை செய்த போதிலும், அவர் அந்த வீடுகளில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 2023 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பத்திரிகையில் வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பானது-யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கம்

  • Mar 1, 2025 - 05:49 PM
  • 0 Comments

யாழ். போதனா வைத்தியசாலையில் விபத்து, சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ATICU ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை சம்பந்தமான விளக்க ஊடக அறிக்கை ஒன்றினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் சங்கம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1. மேற்படி பிரிவு 20 வருடங்களுக்கு மேலாக யாழ் மக்களுக்குத் தேவையான அவசியமான சிகிச்சை, பராமரிப்பு முறைகளை திட்டமிட்டு தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. 2. இங்கு மிகக்குறைந்த தாதியர் ஆளணியுடன் வினைத்திறனான சேவையை வழங்கி வருகின்றனர். இந்த அலகிற்கான சேவையை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தொடரூந்தும் மகிழுர்ந்தும் மோதி விபத்து பலர் காயம்

  • Mar 1, 2025 - 05:40 PM
  • 0 Comments

மாத்தறை, வெலிகமை, ஹெட்டிவீதிக்கு அருகில் உள்ள ரயில் மார்க்கத்தில் இன்று சனிக்கிழமை (01) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கவனக்குறைவாக பயணித்த கார் ஒன்று ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, காரில் பயணித்த பலர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களை கொன்று வட்டுவாகல் விகாரையின் கீழ் புதைத்துள்ளனர்- ரவிகரன் எம்பி

  • Mar 1, 2025 - 05:31 PM
  • 0 Comments

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும் தம்மிடம் முறையிட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நீதிமற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனவே மடியில் கனமில்லையெனில் விகாரையை அகற்றி அகழ்வினை மேற்கொண்டோ, நவீனமுறையில் ஸ்கேன் கருவிகள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் செம்பியன்பற்றில் இரவோடிரலாக ஜேசிபியால் க காடழித்த வித்துவான்

  • Mar 1, 2025 - 04:55 PM
  • 0 Comments

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் இயந்திரம் மூலம் இரவோடு இரவாக பெருமளவான காடு அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (28-02-2025) இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குறிப்பிட்ட நிலப்பகுதியை தனிப்பட்ட தேவைகளுக்காக குத்தகை அடிப்படையில் பெற, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக ஆவன செய்துள்ளார். ஆவண கடிதத்தை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரிடம் கையளித்தவுடன் காடுகள் நிறைந்த சம்பந்தப்பட்ட பெருமளவான […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திருமலை மூதூரில் விபத்து 29 பேர் காயம்

  • Mar 1, 2025 - 04:44 PM
  • 0 Comments

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் மூதூர், இருதயபுரம் பிரதேசத்தில் இன்று) இடம்பெற்ற விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மினுவாங்கொடையிலிருந்து சேருவில் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு யாத்திரீர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களில் பெண்களும் மூன்று சிறுவர்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இருவர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டன!

  • Mar 1, 2025 - 04:38 PM
  • 0 Comments

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கத்தில், இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் இன்றைய தினம் திறக்கப்பட்டன. இதனால் குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.    

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரெலோ,புளொட்,ஈபிஆர்எல்எப் தமிழரசு மீண்டும் கூட்டமைப்பாக இயங்க வேண்டும். சி.வீ.கே.சிவஞானம்

  • Mar 1, 2025 - 04:31 PM
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோருக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில், நடைபெற உள்ள […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சங்குடன் வீணை இணையத்தயாரென முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

  • Mar 1, 2025 - 04:24 PM
  • 0 Comments

தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் நலனுக்காக ஒன்றிய அழைப்பு விடுத்தால் எனது பங்களிப்பு நிச்சயாமிருக்கும் என தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை தலைமை தாங்கிய இயக்கங்களின் ஒன்றிணைவு தொடர்பில் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்த […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp