உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

4 ஆண்டு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு பயணங்களுக்காக 3,572 மில்லியன் ரூபா, செலவுட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்

  • Feb 27, 2025 - 04:54 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராண்டு பதவி காலத்தில் 33 நாடுகளுக்கு சென்றுள்ளார். இப்பயணங்களில் 154 பேர் பங்குபற்றியுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொண்ட 3 வெளிநாட்டு பயணங்களில் 11 பேர் மாத்திரமே பங்குபற்றியுள்ளனர். இதற்கு 1.8 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. பதவிக்கான சிறப்பு சலுகையின் சுமையை மக்கள் மீது நாங்கள் சுமத்தவில்லை இதுவே அரசியல் கலாச்சாரத்தின் ஆரம்ப மாற்றமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இருப்பினும் இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் கடந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நாட்டின் சமகால பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி விமானப்படையினருடன் ஆராய்வு

  • Feb 27, 2025 - 04:36 PM
  • 0 Comments

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், வலுவான விமானப் படையாக இலங்கை விமானப்படையை வலுப்படுத்தல், இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் முன்னெடுப்புகளுக்காக விமானப்படையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இம்முறை வரவு செலவு திட்டத்தில் இலங்கை விமானப்படைக்கான ஒதுக்கீடுகளின் அளவு மற்றும் […]

உலகம் கனடா முக்கிய செய்திகள்

2024 ம் ஆண்டு கனடா அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளது

  • Feb 27, 2025 - 04:33 PM
  • 0 Comments

கனடா கடந்த வருடம் மிக அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளது இவர்களில் அனேகமானவர்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டு;ள்ளது. இது தொடர்பில் ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது. கனடா கடந்த வருடம் அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளது, ஒரு தசாப்தகாலத்திற்கும் மேற்பட்ட காலத்தில் அதிகளவானவர்கள் வெளியேற்றப்பட்டமை கடந்த வருடத்திலேயே. ரொய்ட்டர் பெற்றுக்கொண்டுள்ள தரவுகள் இதனை வெளிப்படுத்துகின்றன. கடந்தவருடம் ஒக்டோபர் மாதம் வரை கனடா நாடுகடத்தியவர்களின் எண்ணிக்கையை வைத்துபார்க்கும்போது 2015ம் ஆண்டின் பின்னர் கடந்த வருடமே கனடா அதிகளவானவர்களை நாடு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய தயாரென ஜப்பான் தெரிவித்துள்ளது

  • Feb 27, 2025 - 04:25 PM
  • 0 Comments

இலங்கையில் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பானிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசொமதா அகியோவிற்கும் ((Isomata Akio இடையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது. ஜப்பானிய அரசாங்கம் அண்மையில் ஆரம்பித்த பாதுகாப்பு ஒத்துழைப்பு உதவித் திட்டத்தில் இலங்கையையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இசொமதா அகியோ தெரிவித்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பிராந்தியத்தில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

புத்தளத்தில் 19 வயது யுவதி மர்ம மரணம்

  • Feb 27, 2025 - 04:10 PM
  • 0 Comments

புத்தளம் கல்லடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் நேற்று (26-02-2025) உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று, யுவதி தனது வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ள நிலையில், அவரது பெற்றோர்கள் அவரை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதன்போது யுவதியை சோதனையிட்டு பார்த்த வைத்தியர்கள், யுவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். யுவதியின் உடற்பாகங்கள் அரச பகுப்பாய்வு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்திய துணை தூதரகத்துடன் யாழ் மீனவர்கள் கலந்துரையாடல்

  • Feb 27, 2025 - 04:04 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் பேரணியாக சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அடைந்தனர். துணை தூதரகத்தின் வீதியில் வீதித்தடை போடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீனவ அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மீனவர்கள் வெளியில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க கோரி தீவக கடற்தொழில் அமைப்பு மகஜர் கையளிப்பு !

  • Feb 27, 2025 - 03:57 PM
  • 0 Comments

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை இன்று தீவக கடற்தொழில் அமைப்பு முன்னெடுத்தது. தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ் பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக ஆரம்பமான போராட்டம், இந்திய துணைத்தூதரகத்திற்கு சென்று, அங்கிருந்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்களினால் நீரியல் வளத்துறை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் போராட்டம்

  • Feb 27, 2025 - 10:58 AM
  • 0 Comments

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டமானது யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னாள் ஆரம்பமாகிய நிலையில் பேரணியாக யாழ்ப்பாண நகர் பகுதி ஊடாக ஆளுநர் செயலகம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கடற்றொழில் சங்கங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் இந்த போராட்டத்தில் பங்குபற்றியுள்ளனர். ‘தாண்டாதே தாண்டாதே எல்லையை தாண்டாதே, அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, இந்திய அரசே […]

செய்திகள்

தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

  • Feb 27, 2025 - 10:53 AM
  • 0 Comments

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அரவிந்த ஸ்ரீநாத நியமிக்கப்பட்டுள்ளார். அரவிந்த ஸ்ரீநாத உத்தியோகபூர்வமாக நேற்று (26-02-2025) கடமைகளைப் பொறுப்பேற்றார். களனிப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப்பிரிவில் பட்டம் பெற்ற இவர் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். அரவிந்த ஸ்ரீநாத இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் கற்றுள்ளதுடன் பல தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசின் பாதீட்டிற்கு எதிராக நாடு முழுவதும் தாதியர்கள் போராட்டம்

  • Feb 27, 2025 - 10:47 AM
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் தாதியர் சேவையிலுள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். வரவு – செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில், பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று மதிய உணவுவேளை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp