உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கணிதம் மற்றும் விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் ஆர்வம் குறைவடைந்து வருகின்றதென்கிறார் பேராசிரியர் சசிகேஷ்

  • Mar 16, 2025 - 02:23 PM
  • 0 Comments

கணித விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது என யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறைப் பேராசிரியர் க.சசிகேஷ் தெரிவித்தார். சட்டத்தரணி செல்வஸ்கந்தனால் மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட மகாஜனன் கணித விஞ்ஞான திறன்காண் போட்டிப்பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று (15-03) தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பாவலர் துரையப்பாப்பிள்ளை மண்டபத்தில் நடைற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கணித விஞ்ஞான துறையில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வெளிநாட்டு விசாரணை பொறிமுறைக்கு அரசாங்கம் ஏன்? அஞ்சுகின்றது என கஜேந்திரகுமார் கேள்வி

  • Mar 16, 2025 - 01:39 PM
  • 0 Comments

நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் உண்மைகள் ஆராயப்பட வேண்டும். அந்த நடவடிக்கை நம்பகத்தன்மையானதாக இருக்க வேண்டும். மஹிந்தவின் ஆட்சியில் மக்கள் விடுதலை முன்னணி இராணுவ தீர்வை தீவிரமாக ஆதரித்தது. அவ்வாறான நிலையில் உண்மையில் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் செயன்முறைக்கு ஆதரவளிக்குமா? என்ற சந்தேகம் காணப்படுகிறது. கடந்த கால அரசாங்கங்களின் போக்கில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டு மென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

12 வயது முஸ்லிம் சிறுமிகள் திருமணம் செய்வதாக அர்சுனா எம்.பி சொல்வது பொய் என்கிறார் மரிக்கார் எம்.பி.

  • Mar 16, 2025 - 01:29 PM
  • 0 Comments

ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை சிறந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள். இன்றும் இருக்கிறார்கள். எவரும் தமது பிரபல்யத்துக்காக பிற மதங்களை விமர்சிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யூ-டியூப் ஊடாக டொலர் உழைப்பதற்காக சுடச்சுட காணொளிகளை பதிவிடுவதற்கு பிற மதங்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு பாராளுமன்றத்தை பயன்படுத்துகிறார். இவ்வாறானவர்களுக்கு உரையாற்ற இடமளிக்காதீர்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று (15-03-2025 ) நடைபெற்ற […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை – ரணில் நிராகரித்துள்ளார்

  • Mar 16, 2025 - 01:13 PM
  • 0 Comments

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தான் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார். 1987 -89 இல் ஜேவிபியின் கிளர்ச்சி உச்சகட்டத்தில் இருந்தவேளை பியகமவில் காணப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய நிறுவனங்களிற்கு பாதுகாப்பை வழங்கிய பாதுகாப்பு படையினருக்கு தங்குமிடங்களை வழங்குமாறு அப்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த ரஞ்சன் விஜயரட்ண எனக்கு விடுத்த உத்தரவை நான் நடைமுறைப்படுத்தியது குறித்தே பட்டலந்த ஆணைக்குழு என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளது என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பறந்துக்கொண்டிருந்த விமானத்தில் 2 விமானப் பணிப்பெண்கள் மீது பாலியல் சேஸ்ட்டை செய்த பயணி கைது

  • Mar 16, 2025 - 01:05 PM
  • 0 Comments

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் இரண்டு பெண் விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று (15-03-2025 ) இரவு 10.00 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் புதிய கூட்டணி – சைக்கிள் சின்னத்தில் போட்டி

  • Mar 16, 2025 - 12:52 PM
  • 0 Comments

ஜனநாயக தமிழரசுக் கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சி மற்றும் அமைப்புகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்துள்ளதாக ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார் சைக்கிள் சின்னத்தில் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதா அவர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (15-03-2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஏப்ரல் 21 வரை அரசுக்கு கால அவகாசம் தவறினால் வீதிக்கு இறங்க தயங்கமாட்டோம்- பேராயர்

  • Mar 16, 2025 - 09:56 AM
  • 0 Comments

இலங்கையிலுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே தற்போதுள்ள ஆட்சியாளர்களை ஆட்சிபீடத்துக்கு ஏற்றினோம். ஆனால் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்தாமலும் எமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் இருந்து வந்தால் நாம் மீண்டும் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படுமென கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தற்போதுள்ள அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். அத்துடன், லசந்த விக்ரமதுங்க கொலை, பிரதீப் எக்னெலியகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீய்த் நொயர் தாக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்ட […]

உலகம்

ஏமனின் ஹவுதிகள் மீது அமெரிக்கா நடத்திய கொடூர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழப்பு

  • Mar 16, 2025 - 09:28 AM
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, ஏமனில் உள்ள ஹவுதிகளுக்கு எதிராக நடத்திய முதல் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர் என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஹவுதி அமைப்புக்கு வழங்கி வரும் ஆதரவை நிறுத்துமாறு ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரின் போது, ஹவுதி அமைப்பினர் இஸ்ரேல் மற்றும் செங்கடல் கடலோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தது. இஸ்ரேலுக்கு எதிரான செயல்களை […]

இந்தியா

உதயநிதி ஸ்டாலினை சந்தித்த திருநங்கைகள்

  • Mar 16, 2025 - 09:11 AM
  • 0 Comments

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கை 2025-26-ல் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தோருக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தமைக்காக, திருநங்கைகள இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் – நன்றியையும் தெரிவித்தனர். கழக அரசு என்றும் […]

இந்தியா

உதயநிதி ஸ்டாலினை சந்தித்த திருநங்கைகள்

  • Mar 16, 2025 - 09:04 AM
  • 0 Comments

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கை 2025-26-ல் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தோருக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தமைக்காக, திருநங்கைகள இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் – நன்றியையும் தெரிவித்தனர். கழக அரசு என்றும் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp