உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் ஒருவர் வாழ 15,780 ரூபாவும் கொழும்பில் ஒருவர் வாழ 17,617 ரூபாவாவும் செலவாகுமாம்

  • Mar 16, 2025 - 06:01 PM
  • 0 Comments

2025 ஜனவரி மாதத்தில் தனிநபர் மாதாந்தச் செலவு அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் ஜனவரி மாத உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் படி, செலவுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, 2025 ஜனவரி மாதத்தில் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான தொகை 16,334 ரூபாவாகும். இது கடந்த ஆண்டு டிசம்பரில் 16,191 ரூபாவா பதிவு செய்யப்பட்டது. தனிநபர் செலவீனங்கள் அதிகம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரிஸாட் எம்.பியின் கட்சியினர் ரவூப் ஹக்கீம் எம்.பியின் கட்சியில் இணைந்தனர்

  • Mar 16, 2025 - 04:54 PM
  • 0 Comments

சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் வீரமுனை வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகின்ற கே.ஆர்.எம். றிசாட்தின் வெற்றிக்கு உழைப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையும் நிகழ்வு கே.ஆர்.எம். றிசாட் தலைமையில் அவருடைய இல்லத்தில் நேற்று (15) சனிக்கிழமை இரவு வேளையில் இடம்பெற்றது. கடந்த காலங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்கு உழைத்த இவர்கள் அக் கட்சியில் பொருத்தமான வேட்பாளர்கள் நியமிக்கப்படாமையின் காரணமாகவும் அகில இலங்கை […]

இந்தியா விளையாட்டு

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக மீண்டும் சம்பியனானது

  • Mar 16, 2025 - 04:01 PM
  • 0 Comments

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் நேற்று (15-03) இரவு நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் 149 ஓட்டங்களைத் தக்கவைத்து 8 ஓட்டங்களால் வெற்றியிட்டிய மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியன் மகுடத்தை சூடியது. 2023இல் ஆரம்பமான மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் முதலாவது அத்தியாயத்திலிருந்து தொடர்ச்சியாக இறுதிப் போட்டியில் பங்குபற்றிவரும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி, மீண்டும் 2ஆம் இடத்ததுடன் திருப்தி அடைந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவரக்ளில் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

வடக்கு மாகாணம் உட்பட பல மாகாங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

  • Mar 16, 2025 - 03:48 PM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அநுராதபுர மாவட்டத்திலும் இன்றுஇடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  

உலகம் வணிகம் வினோத உலகம்

சீனாவின் பிரபல உணவகத்தில் தயாரிக்கப்பட்ட சூப்பில் 2 இளைஞர்கள் சிறுநீர் அடித்துள்ளனர்

  • Mar 16, 2025 - 03:31 PM
  • 0 Comments

சீனாவின் மிகப்பெரிய ஹாட்பாட் சங்கிலியான ஹாய்டிலோ, இரண்டு பதின்ம வயதினர் ஹாட்பாட் சூப்பில் சிறுநீர் கழித்த கிளைக்குச் சென்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது. தனி அறை ஒன்றில் உணவருந்தும்போது இரண்டு சிறார்கள் சூப் பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கும் காணொளி கடந்த மாதம் ஆன்லைனில் பரவலாகப் பகிரப்பட்டது. இந்தச் சம்பவத்தை யார் படம் பிடித்திருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. குடிபோதையில் இருந்த அந்த 17 வயது சிறார்கள் அந்தச் சம்பவம் நடந்தவுடன் கைது […]

உலகம்

அமெரிக்காவில் சூறாவளிக்கு 26 பேர் பலி 2 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு

  • Mar 16, 2025 - 03:20 PM
  • 0 Comments

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், ஒருபுறம் காட்டுத்தீ பரவுகிறது. மறுபுறம் புழுதி புயல் மற்றும் பனி பாதிப்புகளும் மக்களை இன்னலில் தள்ளியுள்ளன. இதுவரை சூறாவளி பாதிப்புக்கு 26 பேர் வரை பலியாகி உள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மிசவுரி உள்ளது. சூறாவளி பாதிப்புக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். இதில், பல்வேறு மாகாணங்களில் பள்ளிகள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் கவிழ்ந்து கிடந்தன. மரங்கள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் மீண்டும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • Mar 16, 2025 - 03:13 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மழை பெய்து வருவதன் காரணமாக தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக வாழச்சேனை, கிரான், செங்கலடி, வெல்லாவெளி, போன்ற தாழ்நில பகுதிகளில் மழைநீர் காணப்பட்ட போதிலும் இன்று பெய்த மழை காரணமாக தாழ்நில பிரதேசங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கிரான், வாகரை, செங்கலடி, போன்ற பகுதிகளில் மக்கள் போக்குவரத்து செய்யும் பிரதான பாதைகள் ஊடாக வெள்ள நீர் […]

உலகம் புதியவை வினோத உலகம்

சுனிதா வில்லியம்ஸ் மீட்க சென்ற விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது

  • Mar 16, 2025 - 02:45 PM
  • 0 Comments

சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சென்றனர். அவர்கள் 10 நாட்கள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பூமிக்கு திரும்ப முடியவில்லை. இதையடுத்து இருவரையும் மீட்டு கொண்டு வர ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. […]

கட்டுரை

யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும்

  • Mar 16, 2025 - 02:30 PM
  • 0 Comments

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யூத எழுத்தாளர் ஆகிய ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூறுங்கள் என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார், மந்தர்களே-அநனழைஉசநள- எல்லா இடங்களிலும் முதன்மை வகிப்பார்கள் என்று. அவர் எதைக்கருதி அவ்வாறு சொன்னார் என்பது தெளிவில்லை. ஆனால் இப்போதுள்ள சமூக வலைத்தள ஊடகச் சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது அது ஒரு தீர்க்கதரிசனமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. சமூக வலைத்தளங்களின் பயன்பாடு என்பது இரண்டு புறமும் கூரான கத்தி போன்றது. ஒருபுறம் சமூக […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp