உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் பதுக்கி வைத்த ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு

  • Mar 15, 2025 - 12:54 PM
  • 0 Comments

முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்று (14-03-2025) மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கடற்படையினரும், முல்லைத்தீவு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டு பார்த்தபோது உர பை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். குறித்த உர பையில் இருந்து 1,400 ரி56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, இந்த துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் வெறியில் சண்டை ஒருவர் பலி மூவர் கைது

  • Mar 15, 2025 - 12:48 PM
  • 0 Comments

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவத்தை பிரதேசத்தில் நான்கு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (14-03-2025) பகல் இடம்பெற்றுள்ளது. வெல்லாவெளி சின்னவத்தை பக்கியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்த நபர் நேற்றைய தினம் பகல் 12.00 மணியளவில் தனது 3 நண்பர்களுடன் இணைந்து சின்னவத்தை பகுதியிலுள்ள வயல் பகுதிக்கு சென்று ஒன்றாக மதுபானம் அருந்தியுள்ளார். இதன்போது, […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தென்னை முக்கோண வலயம் அமைக்கப்படும்

  • Mar 14, 2025 - 09:47 PM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு 5500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலவசமாக தென்னங்கன்றுகள் மற்றும் உரம் வழங்குவதற்காக 819 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு நீர் விநியோகித்துக்கும் நிலப்பரப்புக்கு அமைய நிவாரணம் வழங்கப்படும்மென பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு […]

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்க பணயக் கைதியை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது

  • Mar 14, 2025 - 09:30 PM
  • 0 Comments

பணயக் கைதிகளில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை ஒப்படைக்கவும், அமெரிக்க-இஸ்ரேலிய பணயக் கைதியை விடுவிக்கவும் ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை ஏழு வாரங்கள் இஸ்ரேல்-காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், தற்போது அடுத்த கட்ட போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை கத்தாரில் நடைபெற்று வரும் நிலையில் ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேவேளையில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஏடன் அலெக்சாண்டரை விடுவிப்பது தொடர்பாக எந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கடற்தொழில் அமைச்சரை தமிழ் இளைஞர்கள் சுற்றிவளைத்ததால் பரபரப்பு

  • Mar 14, 2025 - 09:19 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கடற்தொழில் அமைச்சருடன் இளைஞர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. பருத்தித்துறை – பொன்னாலை வீதி புனரமைப்பு பணிகளுக்காக கடந்த அரசாங்கம் நிதி ஒதுக்கி இருந்து, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது , மீள அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனை தேசிய மக்கள் சக்தியினர் தாம் புதிதாக புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பதாக காட்டுகின்றனர் என கூறியே அப்பகுதி இளைஞர்கள் கடற்றொழில் அமைச்சருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பொன்னாலை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தேசபந்து தென்னகோனை கைது செய்ய முடியாத கையாளகாதவர்களே பொலிஸார்- சாகல ரத்நாயக்க

  • Mar 14, 2025 - 09:09 PM
  • 0 Comments

தேசபந்து தென்னகோனின் நியமனம் எனது அழுத்தம் காரணமாக காலம் தாழ்த்தப்படுவதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டது. ஆனால் நான் அவரை மறைத்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். இவை அனைத்தும் கற்பனை கதைகளாகுமென முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு பிளவர் வீதியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் பங்கேற்கச் சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், வேட்புமனு தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் வல்வெட்டித்துறை நகர சபை தொடர்ந்தும் கெடுபிடி

  • Mar 14, 2025 - 08:58 PM
  • 0 Comments

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிடும் சுயேட்சை குழுவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்று யாழ் . தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தினை செலுத்தினர். தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையிலான அணியினர் யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறை நகர சபை தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி சபைகளான 16 சபைகளுக்குமான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சிங்களவர்களே சிங்களவர்களை கொலை செய்த பட்டலந்த கொலை விவகாரம் ரணில் விசேட அறிக்கை

  • Mar 14, 2025 - 08:50 PM
  • 0 Comments

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ளது. பாராளுமன்றில் இன்று அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. எனவே, இந்த பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பான சில விடயங்களை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தொடர் கொலைகளில் மற்றொன்று காலியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

  • Mar 14, 2025 - 08:39 PM
  • 0 Comments

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் இடம்தோட்டை பகுதியில் இன்று மாலை ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் காயமடைந்த நபர் பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை, அத்துடன் சந்தேக நபர்களைக் கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திருகோணமலையில் 2 தமிழ் வயோதிப பெண்கள் கொலையை செய்தவர் 15 வயது சிறுமி

  • Mar 14, 2025 - 08:29 PM
  • 0 Comments

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுமியை பொலிஸார் கைது செய்துள்ளனர். மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவ இடத்துக்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான், சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் விஜயம் செய்து விசாரணை நடத்தினர். இந்த […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp